Home » கரப்பான்பூச்சிகளுக்கு அழிவில்லை
இந்தியா

கரப்பான்பூச்சிகளுக்கு அழிவில்லை

நாட்டிலேயே அதிக எண்ணிக்கையிலான சமூக வலைத்தளப் பின்தொடர்வோரைக் கொண்ட இணையக் கட்சியாக உருவெடுத்திருக்கிறது கரப்பான்பூச்சி ஜனதா கட்சி. தற்போது வரை அதைப் பின்தொடர்வோரின் எண்ணிக்கை மட்டும் இருபத்திரண்டு மில்லியனுக்கும் மேல் உயர்ந்துள்ளது.

எல்லா மகத்தான புரட்சிகளும் ஆரம்பிக்கும் இடத்திலேயே இதுவும் தொடங்கியது. அதிகாரத்தில் இருக்கும் ஒருவர் சொல்லக்கூடாத ஒன்றைச் சொல்லியதால் ஏற்பட்ட விளைவு. நேபாளம், வங்கதேசம், இலங்கைக்கு அடுத்து இந்தியாவில் ஓர் இளைஞர் புரட்சி.

மே பதினைந்தாம் தேதி, இந்தியாவின் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நாட்டின் வேலையில்லாத இளைஞர்களைப் பற்றிய ஓர் ஒப்பீட்டை முன்வைத்தார்.

‘வேலை கிடைக்காத, தொழில் துறைகளில் இடம் பிடிக்க இயலாத இளைஞர்கள் கரப்பான்பூச்சிகளைப் போன்றவர்கள். அவர்களில் சிலர் ஊடகவியலாளர்கள் ஆகின்றனர், சிலர் சமூக வலைத்தளங்களை ஆளுகின்றனர், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் ஆர்வலர்களாக மாறி அனைவரையும் தாக்குகின்றனர்’ என்றார் அவர்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!