ஹானா ஹோஸ்
குழந்தைப் பருவத்தில் ஓடி விளையாடி விவாதங்கள் புரிந்த மாமன் மகன். சட்ட வல்லுநரானதும் அவருடனே திருமணம். கணவரின் அரசியல் ஆசைகள் நிறைவேற உதவிய மனைவி. ஆனால் கணவரின் உச்சக்கட்ட ஆசையான அமெரிக்க அதிபராகும் முன்பே காச நோயால் மரித்துப் போனார். ஆசைக் கணவர் அவரது நினைவுகளை மட்டும் சுமந்து கொண்டு வெள்ளை மாளிகைக்கு வந்தார். கூடவே ஒற்றை மலரைத் தனது கோட்டில் சுமந்துகொண்டு வந்தார்.
மாமியாரின் நினைவுகளோடு மருமகள் முதல் பெண்மணியாக இருந்த காலம்தான் மார்ட்டின் வான் ப்யூரன் அதிபராக இருந்த காலம்.
கிண்டர்ஹூக் என்ற நகரில், ஜொஹனாஸ் டிக்கன்ஸ் ஹோஸ் (Johannes Dircksen Hoes) என்பவருக்கும், மரியா ஃக்வேக்கன் புஷ் (Maria Quakenbush) என்பவருக்கும் மகளாகப் பிறந்தார் ஹானா ஹோஸ் (Hannah Hoes). பள்ளிப் பருவத்தில் தையல், பாடல் சமையல் போன்ற வேலைகளைக் கற்றுக்கொண்டார். தந்தை ஒரு விவசாயி. அன்னையின் மூலமாக அதிபர் ரோஸ்வெல்ட், மன்ரோ போன்ற பல அமெரிக்க அதிபர்களுடனும் நல்ல பரிச்சயம் உண்டு.















Add Comment