Home » வழக்கே நமது வழக்கம்
இந்தியா

வழக்கே நமது வழக்கம்

உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடாக இந்தியா திகழ்கிறது. ஆயினும், சிக்கலான தேர்தல் நடைமுறை இதைச் சாத்தியப்படுத்துவதற்குப் பெரும் சவாலாக உள்ளது. பல கோடி வாக்காளர்களைக் கொண்ட மக்கள்தொகை, பன்முகத்தன்மை வாய்ந்த கலாசார, மொழியியல் வேறுபாடுகள் மற்றும் கடினமான புவியியல் சூழல்களுக்கு இடையே ஒரு பொதுத்தேர்தலை முறையோடு நடத்தி முடிப்பது என்பது அத்தனை எளிய காரியமல்ல. இத்தகைய கட்டமைப்புச் சவால்களுடன், தேர்தல் முடிவுகளில் எழும் குளறுபடிகளும் இப்பெரும் பணியை மேலும் சிக்கலாக்குகின்றன.

இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 329 (ஆ) மற்றும் மக்கள் பிரதிநிதித்துவச் சட்டம், 1951 (Representation of the People Act, 1951) ஆகியவற்றின் கீழ், தேர்தல் வழக்குகளுக்கான விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. ஒரு தொகுதியின் தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு அதில் ஏதேனும் முறைகேடுகள் நடந்திருப்பதாகக் கருதினால், தோற்கடிக்கப்பட்ட வேட்பாளரோ அல்லது அந்தத் தொகுதியின் வாக்காளரோ சம்பந்தப்பட்ட மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தில் நேரடியாகத் தேர்தல் மனு (Election Petition) தாக்கல் செய்யலாம். உயர் நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகே உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடியும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!