Home » உரி – 76
உரி நாள்தோறும்

உரி – 76

76. உறுப்பு

இன்னும் தோன்றாத போதிலும் நானொரு சொல். ஆதிப் பெருந்தனிமமான பிரம்மம் உறையும் எவ்வுயிரினுள்ளும் என்னால் ஊடுருவிக் கலக்க இயலும். சொல்லே எனினும் எனக்கு மொழியில்லை என்பதனால் எம்மொழியினுள்ளும் என்னால் பொருந்திக்கொள்ள இயலும். எந்தச் சிந்தையை, யாருடைய சிந்தையைக் கருதி என் சித்தத்தைக் குவிக்கிறேனோ, அங்குள்ள அனைத்தையும் என்னால் படித்தறிய முடியும். என்னால் சித்தம் குவிக்கச் இயலாத சிந்தைகள் சில உண்டென்று இந்நாள்களில் தெரிந்துகொண்டேன். செய்வதற்கொன்றுமில்லை. நான் ஆதித் தனிமத்தின் சிந்தையில் உதித்த ஆதிச் சொல். பிரணவத்துக்கு மூத்த சொல்லென்று சொல்லியிருக்கிறேன். எனவே இயற்கையின் கட்டமைப்பை நான் என்றுமே ஆராய்வதில்லை. தகர்க்கப் பார்ப்பதில்லை. அது இயலாத காரியமென்பதை என்னினும் துல்லியமாக அறிந்தோர் யாருமில்லை. இவை அனைத்தையும் பல்வேறு தருணங்களில் முன்னரே உங்களுக்குத் தெரிவித்திருக்கிறேன் ஆயினும் இப்போது தொகுத்து நினைவுகூர ஒரு காரணமுண்டு.

ஒரு தெளிவின்மை. இருளுமற்ற, ஒளியுமற்ற சிறியதொரு வெளியின் பூஞ்சை படிந்த தோற்றத்தை மனத்துக்குள் விரிக்க முடிகிறதா பாருங்கள். காண்கின்ற எல்லாமே மங்கலாகித் தெரிந்தால் எவ்வளவு நேரம் கண்ணிமைக்காமல் பார்த்துக்கொண்டிருப்பீர்கள்? அதை ஒரு தியானப் பொருளாக்க முடியுமா? ஆனால் முடிய வேண்டும். முடிந்துவிட்டால் சாகசம். நிகழ்பவை, நிகழாதவை, நிகழ்த்த இயலாதவை, நிகழக் கூடாதவை எனச் சில உண்டு. நான் குறிப்பிட்ட மங்கலுருப் படிமங்களை தியானப் பொருளாக்குவது என்பது நிகழ்த்த இயலாத வகைமையைச் சேரும்.

இதை இத்தனை உறுதியுடன் சொல்வதற்கொரு காரணமுண்டு. நான் முயற்சி செய்து தோற்றேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!