78. புறப்பாடு
நான் சார்வாகனிடம் திரும்பி வந்தபோது அவன் காளத்தியைத் தன் தோளில் எடுத்துப் போட்டு, ஒரு சுருட்டு சுருட்டி விட்டுக்கொண்டு, இப்போது நான் பார்ப்பதற்கு உங்கள் ஈசனைப் போலத் தெரிகிறேனா என்று உதுமானி நாயனாரின் மாணாக்கர்களைப் பார்த்துக் கேட்டுக்கொண்டிருந்தான்.
ஈசன், ஈசனாக அன்றி வேறென்னவாகத் தெரிவான்?
என்று கொடிமுல்லை கேட்டாள்.
இதோ பார், உங்கள் தத்துவக் குப்பைகளால் என் சிந்தையை நிறைத்துக்கொள்ள நான் தயாரில்லை. சர்ப்பம் ஓர் உயிர். ஊரும் தன்மை உள்ளது. அதை ஒருவன் எப்போதும் தனது கழுத்தைச் சுற்றிப் போட்டுக்கொண்டிருப்பதென்பது பெருங்கொடுமை. எந்தச் சிற்பத்திலாவது அவன் கழுத்துச் சர்ப்பத்தைக் கழட்டி வைக்கிறீர்களா? உங்களுக்கெல்லாம் இரக்கமே இல்லை.
அவன் சொல்லிக்கொண்டிருந்தபோது அவன் கழுத்தைச் சுற்றியிருந்த காளத்தி மெல்ல ஊர்ந்தான்.









Add Comment