Home » உரி – 97
உரி நாள்தோறும்

உரி – 97

97. இருக்கும் இடம்

அது தன்னிலை மறந்திருந்தது. சிறகடிப்பில் அதன் பதற்றத்தைக் கண்டுகொண்டேன். அச்சத்திலும் குழப்பத்திலும் தடுமாற்றத்திலும் தவிப்பிலும் அதன் தேகம் நடுங்கிக்கொண்டிருக்க வேண்டும். மயூரத்தின் மீது அமர்ந்திருந்த சார்வாகனின் உடலமும் தூக்கித் தூக்கிப் போட்டது. அவன் பிடிமானத்துக்காக அதன் கழுத்தை இறுக்கிப் பிடித்துக்கொண்டான்.

அத்தனை இறுக்கம் வேண்டாம் சார்வாகனே. நீ விழுந்துவிட மாட்டாய். சிறிது மூச்சு விட்டுக்கொள்ள இடம் கொடு,

என்று மயூரம் சொன்னது.

நீ இவ்வளவு பதற்றமடைந்து நான் கண்டதில்லை.

ஆம். பதற்றம்தான். என்ன நிகழ்கிறதென்று உண்மையிலேயே எனக்கு விளங்கவில்லை அன்பே. ஒரு நகரில் பல நூற்றாண்டுகளாக இருக்கும் கோயிலொன்றைக் காணவில்லை என்றால் என்ன பொருள்?

சினம் கொள்ள மாட்டாய் என்றால் நான் சொல்வேன்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

error: Content is protected !!