ஐரோப்பாவில் மத்தியத் தரைக் கடலின் ஒரு பகுதி ஏட்ரியாட்டிக் கடல். அதில் இருக்கும் ஒரு தீவின் பெயர் சஸான் (Sazan). இத்தீவு அல்பேனியா நாட்டுக்குச் சொந்தமானது. ஏட்ரியாட்டிக் கடலையொட்டி, தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்துள்ளது அல்பேனியா. முப்பது லட்சத்துக்கும் குறைவான மக்கள்தொகையைக் கொண்ட இந்நாட்டின் தலைநகரம் டிரானா.
சஸான் தீவை மையப்படுத்தி அல்பேனியாவில் போராட்டப் புயல் வீசத் தொடங்கியுள்ளது. இதற்கு என்ன காரணம்?
5.7 சதுர கிலோ மீட்டர் பரப்பளவைக் கொண்ட சஸான், அல்பேனியாவின் மிகப்பெரிய தீவு. சூழலியல் முக்கியத்துவம் வாய்ந்த, பாதுகாக்கப்பட்ட பல்லுயிர் மண்டலமாகத் திகழும் அங்கே மக்கள் எவரும் வசிக்க அனுமதியில்லை. இது இப்படியிருக்க, அங்கு ஒரு குறிப்பிட்ட தனியார் நிறுவனம் முன்னெடுக்கவுள்ள ஆடம்பரச் சுற்றுலா விடுதிக் கட்டுமானப் பணிகளை எதிர்த்துதான் கடந்த ஒரு மாதமாக அல்பேனிய மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
















Add Comment