கச்சா எண்ணெய்த் தட்டுப்பாட்டின் காரணமாகச் சமீபத்தில் பிரதமர் நரேந்திர மோடி வாகனப் பயன்பாட்டைக் குறைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார். இதையடுத்து அவரும் அவரது அமைச்சரவை சகாக்களும் தங்களது கான்வாயின் அளவைக் குறைத்தது பேசுபொருளானது. உடனே பிரதமரின் ஆதரவாளர்கள் ஆகா ஓகோ எனப் புகழத்தொடங்கினர்.
ஆனால் இதை விட எளிமையை இந்த உலகம் பார்த்துள்ளது. இரண்டு வருடங்களுக்கு முன் ஒரு நாட்டின் பிரதமர் தனது பதவிக் காலம் முடிந்து வீட்டுக்கு சைக்கிளில் சென்றது வைரலானது. அவர்தான் நெதர்லாந்தின் முன்னாள் பிரதமர் மார்க் ரோத். தற்போது NATO படைகளின் செகரட்டரி ஜெனரலாக உள்ளார். அவருடைய எளிமையைப் பற்றியும், அந்நாடு செய்துள்ள சைக்கிள் புரட்சியைப் பற்றியும் விரிவாகப் பேசுவோம் வாருங்கள்.
ஒரு பிரதமர் அலுவலகம் செல்கிறார் என்றால் உங்களுக்கு என்ன தோன்றும்? ஜாமர் கருவிகளுடன், முன்னும் பின்னும் பல கருப்பு நிற வாகனங்கள், சைரன் ஒலியுடன் விர் விர் எனச் செல்லும் ஒரு பெரிய அணிவகுப்புதானே உங்கள் கண் முன்விரிகிறது?
















Add Comment