மார்த்தா
தாமஸ் ஜெஃபர்சனின் வாழ்வில், அவரது அரசியல் வெற்றிகளுக்குப் பின்னால் தூண்களாக நின்ற இரு பெண்கள் இருந்தனர். ஒருவர், அதிபர் நாற்காலியை ஜெஃபர்சன் தொடுவதற்கு முன்பே மறைந்துபோன அவரது காதல் மனைவி மார்த்தா வேயில்ஸ் ஜெஃபர்சன். மற்றொருவர், தந்தையின் அரசியல் பாரத்தைச் சுமந்து வெள்ளை மாளிகையின் முதல் பெண்மணியாக விளங்கிய அவரது மூத்த மகள் மார்த்தா ஜெஃபர்சன் ராண்டால்ஃப் (பாட்ஸி).
வர்ஜீனியாவின் புகழ்பெற்ற ‘தி ஃபாரஸ்ட்’ தோட்டத்தில் ஜான் வேயில்ஸ், எலிசபெத் ஹெமிங்வேக்கு மகளாகப் பிறந்த மார்த்தா வேயில்ஸ், வசதியான குடும்ப பின்னணியைக் கொண்டவர். அக்காலத்து மேல்தட்டு வழக்கப்படி வீட்டிலேயே கல்வி பயின்றார். இலக்கியம், ஃபிரெஞ்சு மொழியோடு சேர்த்து இசையிலும் பெரும் தேர்ச்சி பெற்றார். குறிப்பாக, பியானோ (Harpsichord / Forte-piano) வாசிப்பதில் தேர்ந்தவராக விளங்கினார்.
மார்த்தா தனது பதினெட்டாவது வயதில் பாத்தர்ஸ்ட் ஸ்கெல்டன் என்பவரை மணந்தார். ஆனால், இரண்டு ஆண்டுகளுக்குள்ளேயே கணவன் இறந்துவிட, இளம் விதவையானார். முதல் கணவர் மூலம் பிறந்த ஒரே மகனான ஜான் ஸ்கெல்டனும் 1771இல் காய்ச்சலால் இறந்துபோனான். அடுத்தடுத்து நேர்ந்த இந்த பெரும் சோகங்களுக்குப் பிறகு, தன் தந்தை வீட்டுக்குத் திரும்பினார் மார்த்தா.
















Add Comment