Home » உரு – 16
உரு தொடரும்

உரு – 16

முத்து நெடுமாறன்

ஒலியுடன் தமிழில்

நேயர் விருப்பம் என்றொரு வானொலி நிகழ்ச்சியை நம்மில் பலர் நினைவு வைத்திருப்போம். நமக்குப் பிடித்த பாடல்களைக் கடிதம் மூலம் எழுதிக் கேட்கலாம். நிகழ்ச்சித் தொகுப்பாளர் நம் கடிதத்தையும் பெயரையும் படித்துவிட்டு அந்தப் பாடலை ஒலிபரப்புவார். தற்காலத்தில் தொலைக்காட்சிகளிலும் ‘வாட்ஸ்ஆப் மூலம் டெடிகேட்’ செய்யும் நிகழ்ச்சியாக இது தொடர்கிறது. அம்மாதிரி ஒரு நிகழ்ச்சி சிங்கப்பூர் வானொலியிலும் இருந்தது. மின்னஞ்சல் மூலம் நேயர்கள் வானொலிக்குக் கடிதம் எழுதும் வழக்கமும் இருந்தது. அந்த மின்னஞ்சலைத் தமிழில் எழுதும் திட்டம் ஒன்றை முத்து பரிந்துரைத்துச் செயல்படுத்தினார்.

ஒரு குறுந்தட்டில் இதற்கான நிரல் இருந்தது. கணினியில் குறுந்தட்டைப் போட்டதும் அது மெயில் எடிட்டரைக் காண்பிக்கும். அதில் நேயர் அனுப்ப வேண்டிய செய்தியைத் தட்டச்சு செய்து அனுப்பினால் நேராக ‘ஒலி’க்குச் சென்றுவிடும். ஒரே கிளிக். சிங்கப்பூர் வானொலி நிலையமான ‘ஒலி’க்காக ‘ஒலியுடன் தமிழில்’ என்று இத்திட்டம் அறிமுகம் கண்டது. சிங்கப்பூர் வானொலி நிலையத்தின் தலைமைப் பொறுப்பில் இருந்த அழகிய பாண்டியன் முத்துவின் நண்பர். திட்டத்திற்குப் பெயரிட்டதும் இவரே. எப்போதும் முத்து செய்யும் பணிகளுக்கு முழு ஆதரவு அளிப்பவர்.

வழக்கம்போல தமிழர்களும் திட்டத்திற்கு, அமோக ஆதரவளித்தனர். ஆங்கிலம், உடைந்த ஆங்கிலம், தங்கிலிஷ் என்றிருந்த கடிதங்கள் தமிழில் வர ஆரம்பித்தன. சிங்கப்பூர் வளர்தமிழ் இயக்கம் இத்திட்டத்திற்குப் பொருளதவி செய்தது. தனி நபர்களும் குறுந்தட்டுகளுக்குப் பணம் செலுத்தி மொத்தமாக வாங்கி இன்னும் பரவலாக்கினார். இப்படி நிறைய வாங்கி பொதுமக்கள் பயன்பாட்டுக்குக் கொடுப்பவர்கள் பெயரும் வானொலி நிகழ்ச்சியில் அறிவிக்கப்படும்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்