Home » உரு – 19
உரு தொடரும்

உரு – 19

முத்து நெடுமாறன்

19 ஒன்றிணைப்புக்கான பயணம்

இளம் வயதில் ஒருமுறை முத்து தன் குடும்பத்தோடு கோயிலுக்குச் சென்றார். புத்தம் புதிய செருப்பை கோவிலுக்கு வெளியே கழட்டி விட்டுச் சென்றார். சாமி கும்பிட்டுவிட்டு வெளியில் வந்து பார்த்தால் மற்ற குடும்ப உறுப்பினர்களின் செருப்புகள் இருந்தன. ஆனால் முத்துவின் புதிய செருப்பு மட்டும் காணவில்லை. எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை. “யாராவது திருடி இருப்பாங்க. இல்லனா கூட்டத்துல சரியா கவனிக்காம போட்டுட்டுப் போயிருப்பாங்க. எவ்வளவு நேரம் தேடுவ. வேற யார் செருப்பையாச்சும் போட்டுகிட்டு வா. நாம போகலாம்” என்று யோசனை கூறினர் உடன் வந்தோர்.

“இன்னொருத்தங்க செருப்பை நான் போட மாட்டேன்” எனத் தவிர்த்து பேருந்து நிறுத்தம் வரைக்கும் செருப்பில்லாத காலுடன் நடந்து வந்தார். பேருந்தில் ஏறி வீட்டுக்கு வந்த பிறகு பல்வேறு அறிவுரைகள் கிடைத்தன. “மூலைக்கு ஒன்னா செருப்ப போட்டு வச்சா இப்படி காணாமப் போகாது” என்பது அதில் ஒன்று. திருடும் நோக்கத்துடன் செருப்பை மாட்டுபவர்கள் ஜோடியாக இருக்கும் செருப்பைத்தான் குறிவைப்பார்கள். இந்தத் தீர்வு சரியெனப்பட்டதால் முத்து அப்படியே செய்தார்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!