Home » உரு – 29
உரு தொடரும்

உரு – 29

முத்து நெடுமாறன்

29 இரண்டாவது குரல்

முத்தரசு, முத்துவின் நண்பர். ஒரு பத்திரிகை தொடங்க உள்ளதாகத் தெரிவித்து அதற்கான தொழில்நுட்பப் பணிகளைச் செய்ய முத்துவை அணுகினார். இணையப் பத்திரிகையாக இதைச் செய்யலாம் என்று ஆலோசனை வழங்கினார் முத்து. முத்தரசுவும் ஒப்புக் கொண்டார்.

முத்து எந்தப் பணியைச் செய்தாலும் தொலை நோக்குப் பார்வையுடன் செய்வார் என்பதைத்தான் நாம் அறிவோமே! ஒரு பத்திரிகைக்கு நிரல் எழுதுவதைக் காட்டிலும் பொதுவாகச் செய்தி நிறுவனங்களுக்குத் தேவைப்படும்படி டெம்ளேட்டாக நிரல் எழுதினார். மற்ற செய்தி நிறுவனங்கள் தேவைப்பட்டால் இதைப் பணம் செலுத்திப் பயன்படுத்திக் கொள்ளலாம். நிரல் எழுதும் உழைப்புக்கு ஊதியம் வந்துவிடும். நாம் ஆரம்பிக்கும் பத்திரிகை வளர்ந்து வருமானம் ஈட்டும் வரைக்கும் காத்திருக்க வேண்டியதில்லை. முத்தரசுவுக்கும் இந்த யோசனை பிடித்திருந்தது. செல்லியல் என்ற பெயரில் பத்திரிகையைத் தொடங்கினார்கள்.

பத்திரிகை டெம்ளேட்டுக்கு முதல் வாடிக்கையாளர் ஃப்ரீ மலேசியா டுடே. FMT. செய்தி இணையத்தில் வெளியாகும்போது சந்தாதாரர்கள் அறிந்து கொள்ளும் புஷ் நோட்டிபிகேஷன் உடன் வந்த முதல் பத்திரிகை என்ற பெயர் பெற்றார்கள். பத்திரிகை நன்றாகப் போனது. ஒரு கட்டத்திற்குப் பிறகு அவர்கள் தனியே செயலியைத் தயாரித்துக் கொண்டார்கள். பங்களாதேஷில் பிடிநியூஸ்24 சேனல் இரு மொழிச் செய்தி நிறுவனம். அவர்களும் முத்துவின் சேவையைப் பயன்படுத்தினார்கள். செல்லியல் இன்றும் இணைய இதழாக வெளிவருகிறது. கூடிய விரைவில் மீண்டும் புதுப்பொலிவுடன் கொண்டுவரும் திட்டமும் இருக்கிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!