Home » உரு – 2
உரு தொடரும்

உரு – 2

முரசு நெடுமாறன்

சூள்

முத்துவின் தந்தை முரசு நெடுமாறன் முதல் தலைமுறைப் பட்டதாரி. அந்தப் பெருமையைப் பெற அவர் பல தடைகளைத் தாண்டி வந்தார்.

சுப்புராயனும் அவர் மனைவி முனியம்மாவும் தம் மகன் படிக்க வேண்டும் என்பதற்குத் தூண்டுதலாக இருந்தனர். கடுமையாக உழைத்தார்கள். எளிமையாக வாழ்ந்தார்கள். சம்பாதித்த பணத்தைத் திறமையாக நிர்வாகம் செய்து சேமித்தார்கள்- எல்லாம் மகனின் படிப்புக்காக.

சுப்புராயனின் விருப்பப்படியே நெடுமாறன் தோட்ட வேலைக்குச் செல்லாமல், பள்ளிக்கூடம் சென்றார். அவர்கள் வசித்த தோட்டத்தில் மூன்றாம் வகுப்புக்கு மேல் பள்ளிக்கூடம் இல்லை. மேற்கொண்டு படிக்க ஐந்தாறு மைல்கள் தினமும் மிதிவண்டியில் போய் வர வேண்டும். சென்று வந்தார். நன்றாகப் படித்தார். ஐந்தாம் வகுப்பு வரைதான் அங்கே இருந்தது. ஆறாம் மற்றும் ஏழாம் வகுப்புகளுக்கு இன்னும் அதிகத் தூரம் பயணித்து நகரத்துக்குச் செல்ல வேண்டும். கிள்ளானுக்குச் சென்று கல்வியைத் தொடர்ந்தார்.

அந்தக் காலத்தில் ஏழாம் வகுப்பு என்பது ஆசிரியர் பணிக்கான ஆயத்தத் தேர்வு. நெடுமாறன், அத்தேர்வில் வெற்றி பெற்றார். தோட்டத்து மக்கள் கொண்டாடித் தீர்த்தனர். சுப்புராயனின் மகிழ்ச்சியைப் பற்றிக் கேட்கவே வேண்டாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!