பெரிய சைஸ் மூட்டைப் பூச்சி போன்ற ஒன்று பசிபிக் சமுத்திரத்தில் மிதந்து வந்துகொண்டிருந்தது. சிறிது நேரம் கழித்து, மீட்புப்பணியாளர்கள் கப்பலில் மூட்டைப் பூச்சியை நெருங்குகின்றனர். அதன் கதவைத் திறந்து உள்ளே இருந்த மூன்று மனிதர்களையும் மிகுந்த பாதுகாப்போடு வெளியே எடுக்கின்றனர். அவர்களது உடலிலிருந்தோ, உடைமைகளில் இருந்தோ,விஷக் கிருமிகள் ஏதும் தொற்றிக் கொள்ளாதிருக்க, மூடிய நிலையில் அவர்களை அழைத்துச் சென்று, பதினேழு நாட்கள் தனிமையில் வைக்கின்றனர். நீல் ஆம்ஸ்ட்றாங், எட்வின் அல்ட்றின், மைக்கல் காலின்ஸ் ஆகிய மூவரும் அன்று முதல் கிட்டத்தட்ட மூன்று வாரங்களை ஒட்டுமொத்தத் தனிமையில் கழிக்கின்றனர். நமது மொழியில் சொல்வதானால், குவாரண்டைன்!
நிலவில் முதன் முதலாகக் கால்வைத்துத் திரும்பிய சாதனை வீரர்களுக்கு, உலகில் கிடைத்த வரவேற்பு இதுதான். முற்றிலும் புதியதொரு தரையைத் தொட்டுத் திரும்பியிருக்கிறார்கள். அவர்களுடன் கூடவே வந்த “சந்திரக் கிருமி” என்ற ஏதாவதொன்று பூமி முழுக்கப் பரவி விடக் கூடாதில்லையா?
Add Comment