Home » வான் – ஓர் அறிமுகம்
தொடரும் வான் விண்வெளி

வான் – ஓர் அறிமுகம்

“ஆப்பிரிக்கர்களிடம் ஐஃபோன் உண்டா? அங்கே இண்டர்நெட் வசதி இருக்கிறதா? குடிக்கத் தண்ணீர் கிடைக்குமா?”

இப்படியெல்லாம் சந்தேகம் கேட்கும் நெட்டிசன்களுக்கு உடனுக்குடன் பதிலளிக்கிறார் உகாண்டா தேசத்து மாடல் அழகியொருவர். இடுப்பில் இலை குலைகளை அணிந்து கொண்டு காட்டுக்கு மத்தியில் போகிறார். பெரிய இலையொன்றைப் பறித்துக் கோப்பையாக்கி அதில் தண்ணீரை முகர்ந்து குடிக்கிறார். டிக் டாக்கில் இதனை ஒரு சிறு வீடியோவாக வெளியிடுகிறார். “பாருங்கள், எங்களிடம் ஃபோன், நெட், தண்ணீர் எதுவுமே கிடையாது” என்ற வரி கீழே ஓடுகிறது. ஒரே நாளில் பதினேழு மில்லியன் மக்களிடம் போய்ச் சேருகிறது வீடியோ. மூன்று மில்லியன் பேர் ஆச்சரியம் கலந்த ஹாஹா குறியிட, அந்தப் பெண்ணின் ஃபாலோவர்ஸ் தொகை திடீரென்று நான்கு மில்லியன் வரை எகிறுகிறது. ஆப்பிரிக்கா என்றாலே மரஸ்மஸ் நோயுடன் வயிறு புடைத்த சிறுவர்களைக் கற்பனை செய்து வைத்திருந்த உலகம் அந்த அழகியையும் அவளது நகைச்சுவையையும் கண்டு ஒரு கணம் அசந்துதான் போகிறது.

இதெல்லாம் ஐம்பது வருடங்களுக்கு முன்னர் சாத்தியமா?

உகாண்டா, கோஸ்டா-ரிக்கா, பப்புவா நியூகினி போன்ற நாடுகளின் பெயர்களை டீவியில் ஒலிம்பிக் விளையாட்டின் ஆரம்ப வைபவத்தில் மட்டுமே கண்டு களித்த முட்டைவாசிகளாக அல்லவா இருந்தோம்.? அந்த நாட்டு மக்களுடன் நேருக்கு நேர் கலந்துரையாடுவோம் என்று எப்போதாவது நினைத்திருப்போமா?

எப்படியிருந்தாலும் இனி எல்லாம் சாத்தியமே.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



உங்கள் எண்ணம்

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!