மனிதனுக்கு எப்போதும் பிரச்னையாக இருப்பது நாக்கு. அடங்க மறு, அத்துமீறு என்று அழிச்சாட்டியம் செய்கிற உறுப்பு. அதைக் கட்டுக்குள் வைக்க, உணவு முறையைச் சரி செய்ய வேண்டும். எங்கே முடிகிறது? பசிக்கிறதோ இல்லையோ, சுவிகியில் ஆர்டர் செய்தால் பக்லாவா கூடப் பத்து நிமிடத்தில் வந்துவிடும். எடையைக் குறைக்க வேண்டுமா? சுலபமான வழி பட்டினி கிடப்பது. உணவை வழங்க ஆயிரம் உணவகங்கள் இருப்பது போல், பட்டினிப் பிரசாரத்துக்கும் இருக்கின்றன. இரண்டிலும் உண்டு எப்போதும் தொல்லை. பயன் முன்னப்பின்ன இருந்தாலும் கண்டிப்பாகக் காலப்போக்கில் உடல் நலமும் பொருளாதாரமும் சீரழியும்.
இக்காலம் இப்படியாக அவதிப்படும் என்பதை எப்படியோ மோப்பம் பிடித்து அறிந்து என்றைக்கோ வள்ளலார் சில எளிய டயட் யோசனைகளைச் சொல்லி வைத்திருக்கிறார். உணவு மினிமலிசம் என்றால் அது வள்ளலார் வழி ஒன்றுதான்.
பசிக்கிறதா? என்ன பசி என்று முதலில் கவனிக்க வேண்டும். வயிற்றுப் பசியா? மனப் பசியா? வயிற்றுப் பசி என்றால், பத்து நிமிடத்தில் சாப்பிட வேண்டும். பத்து நிமிடத்தில் செய்யக் கூடிய எளிமையான உணவையும் அவரே சொல்லி இருக்கிறார். இட்லி சட்னி எல்லாம் வேண்டாம். நேராக Brunchக்குப் போய்விடுங்கள் என்கிறார். அதாவது காலை பதினோரு மணிக்குச் சாப்பிடுவது சரியாக இருக்கும்.















வள்ளலார் சொல்லும் உணவு மினிமலிசம் கட்டுரை அருமை. உணவு குறித்தான விழிப்புணர்வு காலத்தின் தேவை. எத்தனை கவளம் சாப்பிட வேண்டும். மிகையானால் என்ன நடக்கும் என்பது விழிப்புணர்வு. வள்ளலாரின் கோட்பாடும் எளிமை., அதைச்சொன்ன கட்டுரையும் எளிமை. – சிவ. தினகரன், சென்னை 7871336611
nice
சிறப்பான கட்டுரை.உடலுக்கு தேவையான உணவு,அளவு ஆகியவற்றை கச்சிதமாக சொல்லி விட்டீர்கள்.நன்றி..