Home » ஆடிப் பண்டிகையும் அவ்வை சண்முகிகளும்
விழா

ஆடிப் பண்டிகையும் அவ்வை சண்முகிகளும்

மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன் என்று பரந்தாமன் பக்தர்களுக்கு அருளியிருக்கிறார். இதையே அவரது சகோதரி பார்வதி தேவியிடம் கேட்டிருந்தால், மாதங்களில் நான் ஆடிமாதமாக இருக்கிறேன் எனச் சொல்லியிருப்பார்.

கிராமப்புறங்களில் ஆடி அழைச்சிக்கிட்டு வரும். தை துடைச்சிக்கிட்டுப் போவும் என்பார்கள். ஆடிமாதம் வயல்வெளிகளில் விதைத்துவிட்டு, அம்மன் பண்டிகைகளில் ஆரம்பிக்கும் சந்தோஷம். அப்படியே, ஆவணி மாதம் கல்யாணம், கிரகப் பிரவேசம், சீமந்தம், காது குத்து என வீட்டு விசேஷங்களில் தவழ்ந்து வளரும். விநாயகருக்கு சதுர்த்திக் கொண்டாடி, புரட்டாசி மாதம் நவராத்திரி விரதம், ஆயுத பூஜைகளில் டேக் ஆப் ஆகும். ஐப்பசி மாதம் தீபாவளியில் நாடு முழுக்க வெளிச்சமாகப் பரவி, கார்த்திகை மாதம் தீபமாகப் பிரகாசித்து, மார்கழி மாதம் பக்தியிலும், பனியிலும் உறைந்து, தைமாதம் அறுவடையில் நிறைவுக் காணும். தைமாதம் அறுவடை முடிந்தவுடன் விவசாயிகளின் கையில் பணம் இருக்கும். மாசி மாதம் கொடை கொண்டாடுவார்கள். அதன்பின்பு வைகாசி மாதம் வரையிலும் மிகப்பெரிய கொண்டாட்டங்கள், திருவிழாக்கள் பெரும்பாலும் இருக்காது. எனவே, ஒருவகையில் ஆடிமாதம்தான் பக்திக்கும், பண்டிகைகளுக்கும் தோற்றுவாய்.

ஆடிமாதம் பிறந்த உடனேயே மாரியம்மன், காளியம்மன் உள்ளிட்ட அனைத்து அம்மன் கோவில்களிலும் பண்டிகை களை கட்ட ஆரம்பித்து விடும். விழாவிற்கு முகூர்த்தக்கால் நடுவது, அம்மனுக்குப் பூச்சாட்டுவது, கம்பம் நடுவது, தினந்தோறும் கூழ் ஊற்றுவது, பொங்கல் வைப்பது, விதவிதமான விசேஷ அலங்காரங்கள் செய்வது எனக் கோயில் நிர்வாகமும், பக்தர்களும் பிசியாகி விடுவார்கள். ஆடி பதினெட்டு அன்று, பொங்கி பெருவெள்ளமாய் புதுத்தண்ணீர் வந்தவுடன், அம்மனுக்குச் சக்தி அழைப்பு நடைபெறும். அது முடிந்தவுடன் பூமிதித்தல், அலகு குத்துதல், உருளுதண்டம் போடுதல் உள்ளிட்ட அனைத்துவித வேண்டுதல்களும், நேர்த்திக்கடன் நிறைவேற்றுதலும் நடக்கும். இந்த நேர்த்திக்கடன்கள் எல்லாமே, அம்மனுக்கு வேண்டிக்கொண்டு, அவரவர் பிரச்சினைகள் தீர்வதற்கும், தீர்ந்து போன பிரச்சினைகளுக்கு நன்றி செலுத்துவதற்கும் செய்யப்படுபவை. தனி நபர்கள் சார்ந்தவை. ஆனால், பொதுநோக்கில் ஊர் செழிப்பாகவும், சிறப்பாகவும் இருக்கவேண்டும், மழை நன்றாக பொழியவேண்டும், நோய்,நொடி அண்டாமல் இருக்கவேண்டும் என அம்மனிடம் வேண்டிக்கொண்டு, பொதுமக்களுக்கு பொழுதுபோக்கு நிகழ்ச்சியாகவும் சில நேர்த்திக்கடன்கள் செய்யப்படுகின்றன. அவற்றில் ஒன்றுதான் சேலம் மாவட்டம், குகை பகுதியில் அமைந்துள்ள மாரியம்மன் காளியம்மன் கோயில் திருவிழாவில் அப்பகுதி மக்களால் நடத்தப்படும் வண்டிவேடிக்கை நிகழ்ச்சி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!