Home » ஊ ல ல லா லே ஹே ஹோ!
குற்றம்

ஊ ல ல லா லே ஹே ஹோ!

தலைப்பைப் படித்ததும் உங்களுக்கு ஏதாவது நினைவுக்கு வருகிறதா? தொண்ணூறுகளின் இறுதியில் கிரிக்கெட்டைப் பார்க்க ஆரம்பித்தவர்களுக்கு நிச்சயம் மறந்திருக்காது. கிங்ஃபிஷர் நிறுவன விளம்பரத்தின் இசையேதான் அது.

சுதந்தர இந்தியாவின் பெரும் பணக்காரர்களில் ஒருவரான விட்டல் மால்யாவுக்கு மகனாகப் பிறந்தவர் நாம் அறிந்த விஜய் மால்யா. கர்நாடகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட குடும்பம் என்றாலும் விஜய் மால்யா கல்கத்தாவில் பிறந்து படித்து வளர்ந்தவர்.

படிக்கும்போதே தந்தை நடத்தி வந்த United Breweries நிறுவனத்தில் வேலை பார்க்கத் தொடங்கினார். தொழில் நிர்வாக மேலாண்மையில் முனைவர் பட்டத்தைப் பெற்றவர் விஜய் மால்யா என்பதையும் இப்போதைக்கு ஞாபகம் வைத்துக்கொள்ளுங்கள்.

1970களின் இறுதியில் மொரார்ஜி தேசாய் பிரதமராக இருந்தபோது, இந்தியா முழுமைக்கும் ஆல்கஹால் தடை செய்யப்படுவதாக அறிவித்தார். இதனால் ஆல்கஹால் தயாரிக்கும் நிறுவனங்களின் பங்குகள் வெகுவாகச் சரிந்தன. இந்தியாவில் ஆல்கஹாலின் மீதான தடை வெற்றி பெறச் சாத்தியமில்லை எனச் சிந்தித்த விட்டல் மால்யா, அந்த நிறுவனங்களின் பங்குகளை வாங்கிக் குவித்தார். அன்று அவர் நினைத்தது இன்றுவரை மாறவில்லை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!