Home » கரை கடந்த கிரிக்கெட் புயல்கள்
விளையாட்டு

கரை கடந்த கிரிக்கெட் புயல்கள்

இந்திய கிரிக்கெட் வரலாற்றில் மேலும் இரண்டு பக்கங்கள் புரண்டுள்ளன. நவீன கிரிக்கெட் உலகின் ஐகான்களாகிய ரோஹித் ஷர்மாவும், விராட் கோலியும் ஒரு வார இடைவெளியில் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வை அறிவித்துள்ளனர். இந்த முடிவுகளின் பின்னணியும், எதிர்காலத்தில் இந்திய டெஸ்ட் அணியில் ஏற்படுத்தப் போகும் தாக்கங்களும் என்ன?

சச்சின் டெண்டுல்கரின் சகாப்தம் முடிவடைய இருந்தபோது விராட் கோலி சர்வதேச கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைத்தார். அதற்கு முன்னதாக 19 வயதுக்குட்பட்டோர் ஜூனியர் உலகக் கோப்பை போட்டியில் விராட் தலைமையில் இந்திய அணி சாம்பியன் ஆகியிருந்தது. அப்போதே அடுத்த சச்சின் இவர்தான் என்று பேச்சுகள் தொடங்கியிருந்தன.

அதே போல விராட் சீனியர் அணியிலும் தனது இருப்பை வலுவாகப் பதிவுசெய்தார். குறிப்பாக, 2011 உலகக்கோப்பைப் போட்டியில் இந்திய அணியின் வெற்றிக்குக் காரணமாக இருந்தவர்களில் அவரும் ஒருவர். ஐபிஎல்இல் பெங்களூரு அணிக்காக விளையாடிப் புகழ் பெறத் தொடங்கினார். சச்சினின் ஓய்வுக்குப் பிறகு அவர் விளையாடிய அதே நான்காம் நிலையில் களம் புகுந்தார். அங்கிருந்து அவரது ஃபார்ம் சர்வதேச கிரிக்கெட்டில் உச்சத்திலிருந்து இன்னோர் உச்சத்திற்கு மட்டுமே சென்றது. ஒவ்வொரு வருடமும் மூன்று ஃபார்மெட்களிலும் இரண்டாயிரம் ரன்களை அநாயாசமாக அடித்து நொறுக்கினார். தோனிக்குக் கீழ் துணை கேப்டனாக இருந்து கற்றுக் கொண்டு, அவர் ஓய்வுக்குப் பிறகு கேப்டனாக ஒருமனதாக நியமிக்கப்பட்டார். தன் தனிப்பட்ட ஃபார்மையும் தொய்வின்றித் தக்கவைத்துக் கொண்டார். அவருக்கென பெரிய ரசிகர் பட்டாளம் உருவானது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!