ஆயிரம் ஆண்டு பழமையான ஆலயங்களின் தாயகம் தமிழ்நாடு. தஞ்சை பெரிய கோவில், தாராசுரம், மதுரை மீனாட்சி அம்மன், காஞ்சிபுரம் கைலாசநாதர் இப்படி எத்தனையோ உதாரணங்கள். இவற்றில் வீற்றிருக்கும் சிற்பங்கள் எல்லாம் பேரழகு கொண்டவை. மத அடையாளங்கள் என்பதைத் தாண்டி, சேர சோழ பாண்டிய மன்னர்கள் ஆண்ட மண்ணின் பாரம்பரியத்தைப் பறைசாற்றும் சின்னங்களாகவும் அமைந்திருப்பவை. ஆனால் இவற்றைக் கோவில்களுக்குச் சென்றால்தான் பார்க்க முடியும். அல்லது புகைப்படங்களில் பார்த்துத் திருப்திப்பட்டுக் கொள்ளலாம்.
அப்படி இல்லாமல், பாரம்பரியச் சிற்பங்களை வீட்டிலேயே வைத்துப் பார்த்து மகிழ ஒரு வாய்ப்பை உருவாக்கியிருக்கிறது விஸ்மயம் ஆர்ட்ஸ் நிறுவனம். கங்கை கொண்ட சோழபுரம் கோவிலின் சரஸ்வதி, தாராசுரம் ரிஷப குஞ்சரம், தஞ்சை பெரிய கோவிலின் அஷ்டமங்கலம் போன்ற கலைநயம் மிக்க சிற்பங்களை மீட்டுருவாக்கம் செய்து வருகிறது.
இப்படியொரு புதுவிதமான முயற்சியைத் தொடங்கி இருக்கும் விஸ்மேயம் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர்கள் லலிதா ராமிடமும், சுவாமிமலை சரவணனிடமும் பேசினோம்.















Add Comment