பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளிவரப் போகின்றன. மாணவர்கள் மற்றும் அவர்களுடைய பெற்றோர்களுடைய சிந்தனை அடுத்து என்ன படிக்கலாம் என்பதாகத்தான் இருக்கும். அறிவியல் பிரிவைத் தேர்ந்தெடுத்த மாணவர்களுடைய பொதுவான அடுத்த இலக்கு மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்பாகத்தான் இருக்கும். இவ்விரண்டு படிப்புகளையும் தவிர நிறையப் படிப்புகள் உள்ளன.
அந்தப் படிப்புகளைப் படித்தால், படித்து முடித்தவுடன் நல்ல சம்பளத்தில் வேலை கிடைக்குமா?
சுமார் நூற்று ஐம்பது கோடி மக்கள் வாழும் இந்தியாவில் எல்லாவற்றுக்கும் தேவைகள் இருக்கின்றன. நிபுணத்துவம் பெற்ற மனித வளங்கள் பல துறைகளில் இல்லை. அதனால் மாணவர்கள் அவர்கள் விரும்பும் துறையைத் தேர்ந்தெடுத்து படிக்க பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். சில காரணங்களால் தங்களுக்குப் பிடித்த படிப்பைத் தேர்ந்தெடுக்க முடியவில்லை என்றாலும் மாணவர்கள் கவலைப்படத் தேவையில்லை. மருத்துவம் போன்ற தொழில் முறைப் படிப்புகள் தவிர மாணவர்கள் விரும்பும் மற்ற படிப்புகளைப் பகுதிநேரப் படிப்பாகத் தேர்ந்தெடுத்துப் படித்து அத்துறையில் பணியாற்றலாம்.
Add Comment