Home » விக்கி: கைக்குள் ஒரு களஞ்சியம்
நுட்பம்

விக்கி: கைக்குள் ஒரு களஞ்சியம்

இணையத்தைப் பயன்படுத்தும் அனைவருக்கும் தெரிந்த தளமென்றால், கூகுளுக்கு அடுத்தபடியாக கட்டற்ற கலைக்களஞ்சியம் என்ற விக்கிப்பீடியா தான். தெரிந்தோ தெரியாமலோ இதன் பக்கங்களைப் படிக்காதவர்கள் மிகக் குறைவு. மாணவர்களுக்கு இது ஒரு பொக்கிஷம்.

மனித குலத்தின் அவலம் சமூக வலைத்தளங்களில் பெருகி வரும் வன்மம் என்றால், அதே மனித குலத்தின் மகத்தான படைப்பு விக்கிப்பீடியா. எந்த விஷயத்தை எடுத்தாலும் அதைப் பற்றி விக்கிப்பீடியாவில் படிக்கலாம். கட்டணமோ, சந்தாவோ கிடையாது, ஏன் விளம்பரங்களோ, நம் விவரங்களை நமக்குத் தெரியாமல் விற்கும் முயற்சியோகூடக் கிடையாது. ஆங்கில விக்கிப்பீடியாவில் மட்டுமே அறுபத்து இரண்டு இலட்சம் கட்டுரைகள் இருக்கிறது. இதை அச்சடித்தால், ஒரு பாகத்தில் எழுநூறு பக்கம் என்ற அளவில் சுமார் மூவாயிரத்து முந்நூறு பாகங்கள் வரும். இருப்பதிலேயே அதிகம் இருப்பது வாழ்க்கை வரலாறுகளைப் பற்றிய கட்டுரைகள். 270க்கும் அதிகமான மொழிகளில் கட்டுரைகள் இருக்கிறது. தமிழில் பார்த்தால் ஒன்றரை இலட்சம் கட்டுரைகள். இவை எல்லாமே தன்னார்வலர்கள் இலவசமாக எழுதியது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!