Home » அவதூறுகளின் காலம்
உலகம்

அவதூறுகளின் காலம்

நீதிமன்ற உத்தரவின் படி, முதன் முறையாகத் தனது தளத்திலிருந்து ஓர் ஆங்கிலப் பதிவை நீக்கி இருக்கிறது விக்கிப்பீடியா. இதற்கு முன் இல்லாத வகையில், சில எடிட்டர்களின் விவரங்களை வெளியிடவும் ஒப்புக் கொண்டிருக்கிறது. உலகம் முழுதும் இலவசமாகத் தகவல்களைத் தரும் இணைய என்சைக்ளோபீடியா-விக்கிப்பீடியா. அதன் மீது இந்தியாவில் தொடரப்பட்ட அவதூறு வழக்கில்தான் இந்த நடவடிக்கை.

விக்கிப்பீடியா, 2001-ஆம் ஆண்டு சான் பிரான்சிஸ்கோவில் தொடங்கப்பட்டது. தற்போது முந்நூற்றுக்கும் மேற்பட்ட உலக மொழிகளிலும், இருபத்து இரண்டு இந்திய மொழிகளிலும் விக்கிப்பீடியாவின் கட்டுரைகள் கிடைக்கின்றன. ஒரு மாதத்தில் சுமார் எண்பது கோடிப் பேர், விக்கிப்பீடியாவின் கட்டுரைகளைப் படிக்கவோ, எழுதவோ, திருத்தவோ செய்கின்றனர். இந்தியாவில் இதன் பயனாளிகளின் எண்ணிக்கை எழுபத்து எட்டுக் கோடி. ஆங்கிலக் கட்டுரைகளைப் பகிர்வதில் யூஎஸ், யூகே-விற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்தியா.

விக்கிப்பீடியாவின் தளத்தில் இருக்கும் கட்டுரைகளை யார் வேண்டுமானாலும் திருத்தி எழுதலாம். தெற்காசியாவின் முன்னணிச் செய்தி ஊடகமான ANI (ஏசியன் நியூஸ் இன்டர்நேஷனல்) குறித்த விக்கிப் பதிவில் ‘ஐரோப்பியச் சிந்தனைத் தொட்டியில் (think tank) செல்வாக்கு செலுத்துவதை நோக்கமாகக் கொண்ட, பாகிஸ்தானுக்கு எதிராகச் செயல்படும் இந்தியாவின் போலிச் செய்தி ஊடகம்’ என்று முதலில் எழுதப் பட்டிருந்தது. பின்னர் அதில் தொடர்ந்து திருத்தங்கள் செய்யப்பட்டு, ‘அரசாங்கத்துக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்யும் கருவி, பல்வேறு போலி தகவல் தளங்களிலிருந்து செய்திகளை எடுத்துப் பரப்புகிறது, பல தருணங்களில் தவறான அறிக்கைகளை வெளியிடும் ஊடகம்.’ என மாற்றப்பட்டது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!