மும்பை ஐ.ஐ.எம்.-இல் இந்த ஆண்டு சேர்க்கையில், மாணவிகள் அதிக அளவில் இடம்பிடித்துள்ளனர். அதுவும் கடந்த ஆண்டைவிட இரண்டு மடங்கு அதிகமாக. அனுமதிக்கப் பட்ட 518 பேரில் 245 பேர் பெண்கள். இது அந்தக் கல்வி நிறுவனத்தின் வரலாற்றில் புதிய மைல்கல்.
இதே போன்றதொரு எண்ணிக்கை அடிப்படையிலான ஆய்வறிக்கை ஒன்று வெளியாகியுள்ளது. 2023 – 2024 ஆண்டில் மட்டும் கிட்டத்தட்ட இருபத்தைந்தாயிரம் பெண் ஊழியர்கள், பெயர்பெற்ற மென்பொருள் நிறுவனங்களான டிசிஎஸ், இன்போசிஸ், விப்ரோவிலிருந்து விலகியிருக்கின்றனர்.
ஆப்பிள் நிறுவனத்தின் பொருள்களைத் தயாரிக்கும் பாக்ஸ்கான் நிறுவனம் தமிழ்நாட்டில் செயல்பட்டு வருகிறது. ஆப்பிள் மற்றும் பாக்ஸ்கான் இரு நிறுவனங்களிலும், பெண்களை வேலைக்கு எடுப்பதைக் குறித்த கட்டுப்பாடு வழிமுறைகள் இல்லையென்றாலும், இந்த குறிப்பிட்ட பாக்ஸ்கான் நிறுவனம் தனது ஊழியர்களை, ஏஜென்சி மூலம் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். நிறுவனத்தின் அறிவுறுத்தலின்படி அவர்கள் திருமணமான பெண்களை வேலைக்கு எடுப்பதில்லை என்கிற குற்றச்சாட்டுகள் வலுப்பெற்று இப்போது நீதிமன்றம் தலையிட்டிருக்கிறது.
மேற்சொன்ன சம்பவங்கள் மூன்றையும் இணைத்தால் தற்போது இந்தியாவில், வேலை மற்றும் தொழில்துறையில் பெண்களின் பங்களிப்பு ஏன் குறைந்துகொண்டிருக்கிறது என்பதற்கான புரிதல் கிடைக்கும்.
Add Comment