Home » உலகின் சிறந்த ஆசிரியர்
இந்தியா

உலகின் சிறந்த ஆசிரியர்

ரூபிள் நாகி

காஷ்மீரைச் சேர்ந்த ரூபிள் நாகி, உலகின் சிறந்த ஆசிரியருக்கான ‘குளோபல் டீச்சர்’ பரிசைப் பெற்றுள்ளார். இப்பரிசை ஆசிரியர்களின் நோபல் (Teacher’s Noble) என்பார்கள். சர்வதேச அளவில் ஆசிரியர்களுக்கு வழங்கப்படும் இந்த குளோபல் ஆசிரியர் பரிசு, நோபல் பரிசுக்கு இணையானது. 2015ஆம் ஆண்டு முதல் இந்த குளோபல் ஆசிரியர் விருது வழங்கப்பட்டு வருகிறது.

கற்பித்தலைத் தாண்டிக் கல்விக்குச் சேவையாற்றுபவர்களுக்கும், எளிய மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்துபவர்களுக்கும் இப்பரிசு வழங்கப்படுகிறது. அடிப்படை வசதிகள் இல்லாத கிராமத்தில் வாழும் மக்களுக்குத் தனது சம்பாத்தியத்தில் பெரும் பகுதியை வழங்கிய ஒரு கென்ய ஆசிரியருக்கு இப்பரிசு வழங்கப்பட்டது. பாலஸ்தீனத்தில் உள்ள ஆரம்பப் பள்ளிகளில் வன்முறையற்ற சமாதானத்தையும் அமைதியையும் கற்பித்த ஆசிரியர் ஒருவரும் இவ்விருதைப் பெற்றுள்ளார்.

இந்த முறை இந்தியர் ஒருவர் முதல் முறையாக இப்பரிசைப் பெற்றிருக்கிறார். அவர்தான் கல்வியாளர், கலைஞர், சமூகச் செயல்பாட்டாளர் எனப் பன்முகம் கொண்ட ரூபிள் நாகி. ஓவியக்கலை மூலம் கல்வி கற்பிப்பது இவரது பாணி.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!