Home » அதிகார போதையின் தறிகெட்ட ஆட்டம்
உலகம்

அதிகார போதையின் தறிகெட்ட ஆட்டம்

ம்னாங்காக்வா‌

ஆப்பிரிக்க  நாடான ஜிம்பாப்வே, இயற்கை வளங்களும் தொன்மையான வரலாறும் கொண்டது. 1980ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து சுதந்தரம் பெற்றது. விக்டோரியா நீர்வீழ்ச்சி, கிரேட் ஜிம்பாப்வே போன்ற பாரம்பரியச் சின்னங்களுக்குப் புகழ்பெற்றது. தலைநகரான ஹராரே, நாட்டின் அரசியல் மற்றும் நிர்வாக மையமாக விளங்குகிறது. சுமார் 16.9 மில்லியன் மக்கள் வாழும் இந்நாடு, விவசாயம் மற்றும் சுரங்கத் தொழிலைப் பெரிதும் நம்பியிருக்கிறது.

2018ஆம் ஆண்டு முதல் ஜிம்பாப்வே ஜனாதிபதியாக இருக்கும் எம்மர்சன் ம்னாங்காக்வா, முதலை (The Crocodile) என்னும் புனைபெயரால் அழைக்கப்படுகிறார். 2017ஆம் ஆண்டு ராணுவப் புரட்சிக்குப் பிறகு நீண்டகாலத் தலைவராக இருந்த ராபர்ட் முகாபே பதவியிலிருந்து நீக்கப்பட்டதும், ‌தற்போது எண்பத்து மூன்று வயதாகும் ம்னாங்காக்வா‌ அதிகாரத்துக்கு வந்தார்.

2026ஆம் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே ஜிம்பாப்வேயின் அரசியல் களம் பரபரப்பாக இருந்து வருகிறது. ஜனாதிபதி எம்மர்சன் ம்னாங்காக்வா தலைமையிலான அரசு புகுத்த முயற்சிக்கும் அரசியலமைப்பு திருத்தங்களே இந்தப் பரபரப்புக்குக் காரணம். 2028இல் தனது பதவிக்காலம் முடிவடைவதைத் தொடர்ந்து, 2030 வரை பதவியில் நீடிக்க அவரது அரசு அரசியலமைப்பைத் திருத்த முயன்று வருகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!