Home » ஸோரான் மம்தானி: நியூயார்க்கின் புதிய நம்பிக்கை
உலகம்

ஸோரான் மம்தானி: நியூயார்க்கின் புதிய நம்பிக்கை

அப்போது அந்தச் சிறுவனுக்கு வயது பதினான்கு. திரைப்பட இயக்குநரான அவனது அம்மா, The Namesake என்ற படத்தை இயக்குவதற்கான ஏற்பாடுகளைச் செய்து கொண்டிருந்தார்.

அதேநேரத்தில், புகழ் பெற்ற ஹாலிவுட் படத் தயாரிப்பு நிறுவனமான Warner Bros., ஹாரி பாட்டர் படத்தின் நான்காவது பாகத்தை இயக்குவதற்கான வாய்ப்பை அவருக்கு அளித்தது. பெரிய பேனர், பெரிய பட்ஜெட், நிச்சயம் பெரிய சம்பளம். இவற்றையெல்லாம் உதறித் தள்ளுவதா அல்லது வந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்வதா என்று குழம்பிப் போனார் அம்மா.

தன் மகனிடம் ஆலோசனை கேட்டார். அதற்கு அந்தச் சிறுவன் ‘அம்மா, ஹாரி பாட்டரை உருவாக்கப் பல இயக்குநர்கள் இருக்கிறார்கள், ஆனால் உங்களால் மட்டுமே தி நேம்சேக்கை உருவாக்க முடியும்’ என்று சொன்னான். தன் மகன் தந்த ஆலோசனை தனக்குத் தெளிவையும், விடுதலை உணர்வையும் கொடுத்ததாகச் சொல்கிறார் இயக்குநர் அம்மா.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!