செப்டம்பர் 19,2025. சிங்கப்பூர். புனித ஜான் தீவை நோக்கி அப்படகு சென்று கொண்டிருந்தது. சிறிய விருந்தொன்றை சுபீனின் நண்பர்கள் ஏற்பாடு செய்திருந்தனர். சுபீனின் பாடல்கள் பின்னணியில் ஒலித்துக் கொண்டிருந்தன. அடுத்த நாள் சுபீனின் இசைக் கச்சேரி. அதற்கு முன் சற்று இளைப்பாறலாம் என்று புனித ஜான் தீவைத் தேர்ந்தெடுத்தனர்.
படகு நடுக்கடலில் நின்றது. படகில் இருந்தவர்கள் லைஃப் ஜாக்கெட்டை அணிந்து கொண்டு கடலுக்குள் குதித்தனர். சுபீனும் அவர்களுடன் இணைந்து கொண்டார். சில நிமிடங்கள் நீந்தினார். அதன் பிறகு படகுக்குத் திரும்பினார். மேற்கூறிய சம்பவங்கள் அந்தக் காணொளியில் தெளிவாகப் பதிவாகியிருந்தன.
சில நிமிடங்களுக்குப் பிறகு சுபீன் எவ்வித அசைவுமின்றி கடலில் மிதந்து கொண்டிருந்தார். அவர் லைஃப் ஜாக்கெட் அணிந்திருக்கவில்லை. சுபீனை சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர். சுபீனின் உடற்கூறாய்வு அறிக்கையைச் சிங்கப்பூர் மருத்துவமனை வெளியிட்டது. சுபீன் நீரில் மூழ்கி இறந்துவிட்டதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது. கச்சேரி ஒருங்கிணைப்பாளர்களும் அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அதில் சுபீனின் படகுச் சவாரி பயணம் குறித்து தங்களுக்கு எந்தவிதத் தகவலும் தெரிவிக்கப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தனர்.













Add Comment