Home » தப்பான நேரத்தில் வெளியாகும் துப்புகள்
உலகம்

தப்பான நேரத்தில் வெளியாகும் துப்புகள்

கம்யூனிச ஆட்சியில் துப்புக் கொடுத்த அறுபதாயிரம் பேருடைய அடையாளங்களைப் பொதுமக்கள் பார்வைக்கு வெளியிட்டிருக்கிறது ஹங்கேரி அரசாங்கம். தலைநகர் புடாபெஸ்ட்டில் உள்ள பாதுகாப்புத் துறையின் வரலாற்று ஆவணக் காப்பகத்தில் இவை அடுக்கப்பட்டுள்ளன.

மின்சார வாரிய அட்டையைப் போன்றதொரு மஞ்சள் நிற அட்டை. அதில் துப்புக் கொடுப்பவரின் பெயர், குடும்பம், பணி சார்ந்த தகவல்கள், அரசியல் சார்புகள் அனைத்தும் அடங்கியிருக்கும். ஹங்கேரி ரகசியக் காவல்துறையில் அவரது பதவியும் குறிப்பிடப்பட்டிருக்கும். இதனுடன் இணைந்த கோப்பில் அவர் சமர்ப்பித்த அறிக்கைகளும் இடம்பெற்றிருக்கும்.

பார்வையிட வரும் பொதுமக்களுக்கு, இவற்றை எப்படி அணுகுவது என்பதும் விளக்கப்படுகிறது. ஆன்லைன் மூலம் இந்தத் தகவல்களைப் பெறவும் இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சோவியத் ஆட்சியில் ஹங்கேரியின் ரகசியக் காவல்துறையால் பொதுமக்கள் எவ்வாறு கண்காணிக்கப்பட்டார்கள் என்பதை வெளிப்படுத்தவே இந்த ஏற்பாடு. குடும்பங்கள், நண்பர்கள், கணவன் மனைவிக்கிடையே கூட அரசாங்கத்துக்காக உளவு பார்ப்பவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நிரூபிக்கும் ஆவணங்கள் இவை.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!