Home » திரும்பிப் போ!
உலகம்

திரும்பிப் போ!

அது பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தின் ஏதோ ஒரு சிறுவர் முன்பள்ளி. நுழைவாயிலில் நூற்றுக்கணக்கான சிறுவர்கள் வரிசைகளில் குழுமி நிற்க, அவர்கள் ஒவ்வொருவருக்கும் கைலாகு கொடுத்தவாறு கண்ணீருடன் வெளியேறிக் கொண்டிருக்கிறது மற்றொரு சிறுவர் பட்டாளம். வரிசைகளில் நிற்பவர்கள் யாவரும் பாகிஸ்தான் மண்ணின் மைந்தர்கள். பிரியாவிடை சொல்லிக் கொண்டிருப்பவர்கள் ஆப்கானிஸ்தான் அகதிகளின் வாரிசுகள். எங்கும் பேரமைதி மயம், எதிலும் சோக மயம். யாரைப் பார்த்தாலும் ஏதோ ஒன்றைப் பறிகொடுத்த ஆற்றொணாத் துயரம். இந்தப் பள்ளியில் மட்டுமல்ல, பாகிஸ்தானிலிருக்கும் இதுபோன்ற அனைத்துப் பள்ளிகள், கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள், வேலைத்தளங்களில் எல்லாம் இம்மாதிரியான பிரிவுத் துயர் வைபவங்களுக்கு இந்நாள்களில் யாதொரு குறைவுமில்லை.

இதன் பின்னணி என்ன.? பாகிஸ்தானில் என்ன நடந்து கொண்டிருக்கிறது.?

பாகிஸ்தானின் இடைக்கால அரசு சட்டவிரோதமாய்க் குடியிருக்கும் ஆப்கன் அகதிகளைப் பிடித்துக் கைது செய்து நாடு கடத்திக் கொண்டிருக்கிறது. கேட்கும்போதே பகீரென்று தலைசுற்றல் எடுக்கும் புள்ளிவிபரம் என்னவென்றால் பாகிஸ்தானில் இருக்கும் நாற்பது லட்சம் ஆப்கன் அகதிகளில் பதினேழு லட்சம் பேருக்கு முறையான ஆவணங்கள் எதுவுமில்லை. இச்சட்டவிரோதக் குடியேறிகள் அனைவரும் நவம்பர் முதலாம் தேதிக்குள் வெளியேறிவிட வேண்டுமென்று பாகிஸ்தான் அரசு சில மாதங்களாய்ச் சொல்லி வந்தது. கால எல்லை முடிந்த மறு நொடியே ஏராளமான தற்காலிக அகதி முகாம்களை உடைத்து நொறுக்கிவிட்டது பாகிஸ்தான் காவல்துறை. விளைவு, சில லட்சம் பேர் தலைமறைவாகித் தப்ப, மீதிப் பேர் பிரம்மாண்ட லாரிகளில் திணிக்கப்பட்டு, நேர்ச்சைக்குக் கொண்டு செல்லும் பலியாடுகள் போல ஆப்கனை நோக்கி விரட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!