Home » அகரம் யாருடைய வெற்றி?
கல்வி

அகரம் யாருடைய வெற்றி?

அகரம் விதைத் திட்டம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆனதைக் கொண்டாடும் விழா கடந்த சில வாரங்களாக தமிழ்நாட்டின் ஹாட் டாபிக். ‘நடிகர் சூர்யா ஒருநாள் காரில் போய்க்கொண்டிருந்தபோது, படிக்காமல் பிச்சை எடுத்துக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்து…’ வகையறா பதிவுகள் ஃபேஸ்புக்கில் வலம் வருகின்றன. ‘அகரம் பவுண்டேஷன் வழியாக கறுப்புப் பணத்தை வெள்ளையாக மாற்றி மும்பை, லண்டன், சென்னை ஈசிஆர் எனப் பல இடங்களில் சொத்து வாங்கும் சூர்யா…’ வகைப் பதிவுகள் வாட்ஸப்பில் சுற்றுகின்றன. இந்த இரு எல்லைகளுக்கும் நடுவே, அரசாங்கம் செய்ய வேண்டிய வேலையை அமைப்புகள் செய்தால் அப்புறம் அரசு என்னதான் செய்யும் எனக் கேட்கும் அதிகம் கவனிக்கப்படாத சீரியஸ் விவாதங்களும் உண்டு.

சூர்யா அரசியலுக்கு வருவாரா என்கிற எதிர்காலக் கேள்விகளுக்குச் செல்லும் முன்பு. அகரம் என்ன செய்தது, என்ன செய்து கொண்டிருக்கிறது போன்ற கேள்விகளுக்கு விடை காண்பது அவசியம்.

அகரத்தின் தொடக்கமாக, சூர்யா தனது தந்தை சிவகுமார் செய்து வந்த கல்விப் பணியை மேடையில் குறிப்பிடுகிறார். சூர்யாவுக்கும், இயக்குநர் த.செ. ஞானவேலுக்கும் இடையே உருவான நட்பு இன்னும் துல்லியமான தொடக்கப்புள்ளி. ஞானவேல் சமூகப் பணிகளில் ஆர்வம் கொண்டவர். தமிழ் இலக்கியத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். பத்திரிகையாளர். விகடனுக்காக நீதிபதி சந்துருவை அவர் எடுத்த பேட்டியின்போது கிடைத்த கதைக்கருவே பின்னாளில் அவர் இயக்கத்தில் ஜெய்பீம் திரைப்படமாக வந்தது. ‘இப்படிக்கு சூர்யா’ தொடர் கூட விகடனில்தான் வந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!