Home » இந்தியாவில் ஹார்வர்ட்?
கல்வி

இந்தியாவில் ஹார்வர்ட்?

அமெரிக்க அதிபர் டிரம்ப் தனது கருத்தியலோடு முரண்படும் பல்கலைக்கழகங்களுக்கு வழங்கும் நிதியை முடக்கியுள்ளார். இந்தப் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பித்த வெளிநாட்டு மாணவர்களின் விசா நேர்காணல்களையும் இடைநிறுத்தம் செய்துள்ளார். டிரம்ப்பின் அமெரிக்க விசா தடையை வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் (இங்கிலாந்து, கனடா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி) சர்வதேச மாணவர்களை ஈர்ப்பதற்கான ஒரு வாய்ப்பாகக் கருதுகின்றன. குறிப்பாக விசா விதிகளைத் தளர்த்துவதுடன், படிப்பு முடிந்ததும் வழங்கப்படும் ஒர்க் விசாவின் காலக்கட்டத்தை அதிகரிக்கப் போவதாக, பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஆதரவு அளித்து வருகின்றன. இந்த வாய்ப்பை இந்தியப் பல்கலைக்கழகங்கள் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்த முடியுமா என்பதை விரிவாகப் பார்க்கலாம்.

கற்காலம் தொட்டு தம் திறமை வாய்ந்த மாணவர்களை இந்தியா அமெரிக்காவிடம் இழந்து வருகிறது. ஐஐடியில் இருந்து மட்டும் அறுபது சதவீத மாணவர்கள், உயர் கல்விக்காகவும் வேலைவாய்ப்புக்காகவும் அமெரிக்காவுக்கு இடம்பெயர்கின்றனர். அமெரிக்காவில் உள்ள சர்வதேச மாணவர்களில் கிட்டத்தட்ட மூன்றில் ஒரு பங்கு பேர் இந்தியாவைச் சேர்ந்தவர்கள். டிரம்ப்பின் இந்த முடிவால். இந்திய மாணவர்களின் விண்ணப்பங்கள் வரும் ஆண்டு கணிசமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Global University Rankings கணக்கெடுப்பின் படி உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களின் பட்டியலில் இந்தியா (ஐஐடி மும்பை) 149 வது இடத்தில் உள்ளது. இந்தியக் கல்வித்துறையில் நிலவும் பணப் போதாமையே இதன் பிரதானக் காரணமாகச் சொல்லப்படுகிறது. 4 – 4.5 சதவீதம் வரை மொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) கல்வித் துறைக்கு இந்தியா செலவு செய்கிறது. ஒப்பீட்டளவில் சீனாவை எடுத்துக் கொண்டால், சென்ற பத்து ஆண்டுகளில் கணிசமான தொகையை கல்வி ஆராய்ச்சியில் (research) முதலீடு செய்துள்ளது. மேலும் வெளிநாடுகளில் இருக்கும் சீன ஆசிரியர்களுக்குச் சர்வதேசச் சந்தைக்கு ஈடான வெகுமதிகளைக் கொடுத்து தாய் நாட்டுக்குக் கடத்திக் கொண்டு வந்தது. இந்தியப் பல்கலைக்கழகங்களில் இது போன்று நிகழ சாத்தியமில்லை என்று அறுதியிட்டுக் கூறலாம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!