அமெரிக்கப் பல்கலைக்கழகத்தில் பயின்றுவந்த கர்நாடக மாணவருடைய மரணம், வெளிநாடுகளில் பயிலும் இந்திய மாணவர்கள் சந்திக்கும் சவால்களை மீண்டும் பேசுபொருளாக்கியுள்ளது.
இருபத்திரண்டு வயதான சாகேத் ஸ்ரீனிவாசய்யா, மெட்ராஸ் ஐஐடியில் வேதிப் பொறியியலில் இளங்கலைப் பட்டம் பெற்றவர். அமெரிக்காவின் பெர்க்லீயிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் வேதியியல் மற்றும் உயிர் மூலக்கூறுப் பொறியியல் துறையில் முதுகலை பயின்றுவந்தார். ஒரு வாரத்துக்கும் மேலாக அவரைக் காணாத நிலையில், ஓர் ஏரியில் பிணமாகக் கண்டெடுக்கப்பட்டார். அவருடைய மரணத்துக்கான காரணத்தைப் போலிசார் இன்னும் உறுதியாகக் கூறவில்லை. முதல்கட்ட விசாரணையில் அவர் தற்கொலை செய்துகொண்டிருக்கலாம் என்று கூறுகின்றனர்.
சாகேத்துடைய நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்ததாக அவருடைய அறைத்தோழர் பனீத் சிங் கூறுகிறார். அவர் யாருடனும் சரியாகப் பேசவில்லை. எல்லாவற்றிலிருந்தும் விலகியிருந்தார். விரக்தியான பாவனைகளை வெளிப்படுத்தினார். அது குறித்து பனீத் சிங் கேட்டபோது, தான் எதையும் பொருட்படுத்துவதை நிறுத்திவிட்டதாகக் கூறியுள்ளார். அவர் காணாமல் போனதற்குச் சில நாள்கள் முன்புவரை, சரியாகச் சாப்பிடுவதைக்கூட நிறுத்தியுள்ளார். சிப்ஸ் வகைகளையும் பிஸ்கட்டுகளையும் மட்டுமே உண்டுவந்துள்ளார். மனத்தளவில் அவர் ஆழமாகப் பாதிக்கப்பட்டிருக்கவேண்டும் என்று காலம் கடந்தபின் இப்போது தோன்றுகிறது என்கிறார் பனீத்.















Add Comment