அமீரகத்தின் அரசாங்கப் பள்ளிகளில் அடுத்த கல்வியாண்டிலிருந்து செயற்கை நுண்ணறிவு (AI) ஒரு முக்கியப் பாடமாக அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இந்த முடிவை அமீரகத்தின் துணை அதிபரும், பிரதமரும், துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் மே 4, 2025 அன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.
கடந்த வருடம் துபாய் இளவரசர் ஷேக் ஹம்தான் தலைமையில் ஏஐக்கான அமைச்சர் நியமிக்கப்பட்டார். அவர் கீழ் பதினொரு பேர் கொண்ட குழு உருவானது. அதன் தொடர்ச்சியாக ஆசிரியர்களுக்குச் செயற்கை நுண்ணறிவில் பயிற்சிகள் அளிக்கப்பட்டன. சிறந்த ஆசிரியர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டன.
இப்போது ஆரம்பப்பள்ளியிலிருந்து பன்னிரண்டாம் வகுப்பு வரை படிக்கும் அரசுப் பள்ளி மாணவர்களுக்காக இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. இதற்காகக் கல்வி அமைச்சகம் விரிவான ஏஐ பாடத்திட்டத்தை உருவாக்கியுள்ளது. இந்தப் பாடத்திட்டம் ஏழு முக்கியப் பகுதிகளை உள்ளடக்கியதாக இருக்கிறது.














Add Comment