Home » AIM IT – 18
aim தொடரும்

AIM IT – 18

படைப்பதினால் என் பேர் இறைவன்…

இணையத்தில் இருப்பதை மட்டுமே தேடுவதற்கு கூகுள். மனிதகுலம் ஏற்கனவே உருவாக்கி வைத்திருக்கும் கண்டெண்ட்டைத் தேடிக் கொடுப்பது தான் கூகுள் போன்ற தேடுபொறிகளின் வேலை. இவ்வாறிருந்த காலம் வரை ஆக்கம் என்பது மனிதர்களிடம் மட்டுமே இருந்தது.

ஆனால் ஏ.ஐ வந்தபின் இது மாறிப்போனது. மனிதர்களுக்குப் போட்டியாக ஏ.ஐயும் கன்டென்ட்களை உருவாக்கத் தொடங்கியது. வகைவகையான கன்டென்ட்கள். உரைநடை. கவிதை. படங்கள். வீடியோக்கள். சாஃப்ட்வேர் என்று ஏ.ஐ எதையுமே விட்டுவைக்கவில்லை.

கலைப் படைப்பு என்பது தங்களுக்கு மட்டுமே உரிய ஓர் உயர்பண்பென மனிதர்கள் நம்பிவந்தனர். பிற உயிர்களுக்கு அது சாத்தியமில்லை என்பதில் உறுதியாக இருந்தனர். ஏ.ஐ என்னும் உயிரற்ற ஒன்று மனிதர்களுக்குப் போட்டியாக வந்திருப்பது வரலாற்றில் இதுவே முதல் முறை.

கற்பனையும் அறிவும் ஒரு குறிப்பிட்ட விகிதத்தில் சேர்க்கப்படும்போது நிகழும் அற்புதம் தான் படைப்பு. ரசவாதம் (அல்கெமி) போன்றது. இல்லாத ஒன்றைப் புதிதாக உருவாக்கும் போது, சில பிரச்னைகள் வருவது இயல்பு.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!