Home » AIM IT – 21
aim தொடரும்

AIM IT – 21

நான் பேச நினைப்பதெல்லாம்…

ஏ.ஐயின் தாய்மொழி எது? சிலருக்கு இக்கேள்வியே பொருளற்றதாகத் தோன்றலாம். ஆனால் நீங்கள் ஓர் ஏ.ஐ ஆர்வலர் என்றால் இவ்வினா சுவாரசியமானது. ஏ.ஐ மனிதர்களின் மொழிகளில் எழுதுகிறது. பேசுகிறது. அப்படியென்றால் மனிதனுக்கு இருப்பது போலவே ஏ.ஐக்கென்று ஒரு தாய்மொழி உண்டா? அதற்கான தேவையிருக்கிறதா? எண்ணற்ற மொழிகளை ஏ.ஐ எவ்வாறு கையாள்கிறது?

எத்னோலாக்  என்று ஒன்றிருக்கிறது. உலக மொழிகள் குறித்த தகவல் திரட்டு. எத்னோலாக் தற்சமயம் ஏறத்தாழ ஏழாயிரம் மொழிகள் இருப்பதாகத் தெரிவிக்கிறது. இம்மொழிகள் அனைத்துமே ஏ.ஐக்குத் தெரியுமா?

இக்கேள்விக்கான பதிலைத் தெரிந்துகொள்ள, முதலில் ஏ.ஐ எவ்வாறு மொழி கற்கிறது என்று அறிய வேண்டும். மனிதர்களாகிய நாம் மொழிகளைக் கற்கும் விதமும் ஓர் ஏ.ஐ மாடல் மொழி கற்கும் விதமும் ஒன்றல்ல. முற்றிலும் வேறுபட்டது.

பொதுவாக நாம் ஒரு மொழியை முறையாகக் கற்க விரும்பினால், எழுத்து, சொல், வாக்கியம் என்னும் வரிசையில் செல்வோம். மொழியின் இலக்கணத்தை முழுமையாக அறிந்துகொள்ளாவிட்டாலும், ஒரு குறிப்பிட்ட அளவுக்காவது தெரிந்துகொள்வோம். நமக்கான ஒரு சொல்வங்கியை சிறுகச் சிறுக உருவாக்கிக்கொள்வோம். பின்னர் திக்கித் திக்கி இவ்வார்த்தைகளைக் கோத்துப் பேசத் தொடங்குவோம்.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!