Home » AIM IT – 23
aim தொடரும்

AIM IT – 23

ஸ்ட்ராபெர்ரி கண்ணே…

அறிவு எல்லைகளற்றது. பிரபஞ்சம் போலவே. ஆனால் நாம் அறிந்து வைத்திருப்பது நிச்சயம் எல்லைகளுக்குட்பட்டது. இவ்வெல்லைகளே நம்மால் என்ன செய்ய இயலும் அல்லது இயலாது என்பதைத் தீர்மானிக்கின்றன. மனிதர்களுக்கு மட்டுமல்ல ஏ.ஐகளுக்கும் இது போன்ற அறிவு எல்லைகள் உள்ளன.

மனிதர்களுடன் ஒப்புநோக்குகையில் ஏ.ஐயின் அறிவு எல்லை என்பது நன்கு வரையறுக்கப்பட்டது. ஓர் ஏ.ஐ மாடலிடம் உரையாடுகிறீர்கள். நீங்கள் கேட்டதற்குச் சமர்த்தாய் பதில் சொல்லிக்கொண்டே வருகின்றது. திடீரென்று ஒரு கேள்விக்கு, ஏஐ மாடல் “இந்த விஷயத்துல இதுக்கு மேல எனக்கு வேறெதுவுமே தெரியாது பாஸ்…” என்று சட்டென்று பொறுப்புத் துறப்பு செய்துவிடுகிறது. இதற்கு மேல் நீங்கள் இந்திய ராணுவத்தையே அழைத்துவந்து விசாரித்தாலும் அதனிடமிருந்து கூடுதல் தகவலெதையுமே பெற இயலாது. ஏனெனில் நிஜமாகவே அதற்குத் தெரியாது.

சாட்ஜிபிடியின் முதல் வெர்ஷனுக்கு இண்டர்நெட்டில் இருப்பதைக் கூடத் தேடத் தெரியாது. தனக்குப் புகட்டப்பட்டவற்றை மட்டுமே திரும்பத் திரும்ப பல்வேறு பெர்முடேஷன் காம்பினேஷன்களில் சொல்லி மகிழ்ந்தது. சிறு சிறு கண்ணாடித் துண்டுகளைக் கொண்டே, கலர் கலராக ஜாலம் காட்டும் கலைடாஸ்கோப்போல. நான் படித்த தமிழ் மீடியத்தில் கலைடாஸ்கோப் என்று தான் சொல்லிக் கொடுத்தார்கள். க்ளாடிடம் கேட்டால், ”வண்ணக்காட்சிக்குழல்” என்கிறது. உங்களின் அறிவு எல்லைக்குள் இச்சொல் இருக்கிறதா? நிற்க.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்