லைக்… கமெண்ட்… சப்ஸ்க்ரைப்
நாம் ஏஐயை இருவிதமாக நுகர்கிறோம். ஒன்று ஏ.ஐயைக்கென்றே பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட கருவிகளின் மூலம். உதாரணமாக சாட்ஜிபிடி, ஜெமினி, இடியோக்ராம் போன்றவை. இரண்டாவது ரகம் இன்னும் சுவாரசியமானது. ஏற்கனவே இருக்கும் கருவிகளில் ஏ.ஐ வசதிகளைச் சேர்ப்பது. இது பட்டுச்சேலையில் இழையோடும் ஜரிகை போல அக்கருவிகளின் வசீகரத்தை அதிகரிக்கிறது.
இன்றைய தேதிக்கு நாம் பயன்படுத்தும் பெரும்பாலான சாஃப்ட்வேர்களில் ஏ.ஐ வசதி வந்துவிட்டது. எம்.எஸ் ஆஃபீஸ் தொடங்கி, ஃபோட்டோஷாப், ஜீமெயில் என எங்கெங்கும் ஏ.ஐ தான்.
இந்த வரிசையில் அனுதினமும் நாம் பயன்படுத்துவது யூ-ட்யூப். சென்ற வாரம் (செப்டம்பர் 18, 2024) சில ஜிகுஜிகு ஏ.ஐ வசதிகளை யூ-ட்யூப் அறிவித்துள்ளது. யூ-ட்யூபின் தலைமைச் செயல் அதிகாரி நீல் மோஹன் இவ்வசதிகள் க்ரியேட்டர்களிடம் பெரும் வரவேற்பைப் பெரும் என்கிறார்.
ஏற்கனவே மாண்பமை மானுட சமூகம் ஷார்ட் வீடியோக்களில் மூழ்கித் திளைக்கின்றது. அவற்றை இன்னமும் ஈர்ப்புடையதாக்கப் புதிய ஏ.ஐ வசதிகள் வருகின்றன. ஒவ்வொன்றாகப் பார்போம்.
Add Comment