எங்கிருந்தோ வந்தான்…
பயணத்திற்காக நாம் செலவு செய்யும் நேரம் அதிகரித்துள்ளது. அன்றாடம் சில மணி நேரப் பயணம் என்பது இயல்பான ஒன்றாகியுள்ளது. பெருநகரங்களில் வாழ்வோர் தங்கள் வாழ்வின் பெரும்பகுதியை இவ்வாறான பயணங்களில் விரயமாக்க வேண்டியுள்ளது. இதற்கென்ன தீர்வு?
”வொர்க் ஃப்ரம் ஹோம்”. இல்லம் தேடி அலுவலகம். இப்படித் தான் சராசரியாகச் சிந்திக்கும் எவருக்கும் தோன்றும். ஆனால் எலான் மஸ்க் சராசரி நபரல்ல. அவர் சிந்தனையில் உதித்த யோசனை தான் ஓட்டுநரில்லா வாகனங்கள். ட்ரைவர்லெஸ் கார்கள்.
“இது தான் ஏற்கனவே இருக்கே…?” என்று தானே கேட்கிறீர்கள். ஏற்கனவே இருப்பதென்னவோ உண்மை தான். ஆனால் இந்த வாரம் (Oct 10, 2024) நடந்த டெஸ்லா நிகழ்வில் இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றுள்ளனர்.
ஏஐ உலகில் இப்போது இது தான் பரபரப்பாகப் பேசப்பட்டுக்கொண்டிருக்கிறது. டெஸ்லா நிறுவனம் தங்களின் நிகழ்விற்கு “வீ, ரோபாட்” (We, Robot) என்று பெயரிட்டிருந்தது. “நாங்கள், எந்திர மனிதர்கள்”. “ஐ, ரோபாட்” என்றொரு திரைப்படம் வந்தது. சயின்ஸ் ஃபிக்ஷன் ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது இத்திரைப்படம். அன்று அறிவியல் புனைவாகப் பேசப்பட்டது தற்போது உண்மையாகியுள்ளது.
Add Comment