அகரமுதல எழுத்தெல்லாம் அறியவைத்தாய் தேவி…
அன்றைய நாளின் நீண்ட பணிகளை முடித்து வீடு திரும்புகிறார் ரோனன் எல்டன். மைக்ரோசாஃப்ட் நிறுவனத்தின் ஆராய்ச்சித் துறையின் முக்கிய அங்கம் இவர். அவருக்கொரு செல்வமகள். தன் தந்தை ரோனன் சொல்லும் கதைகளைக் கேட்டால் தான் அச்சிறுகுழந்தைக்குத் தூக்கம் வரும்.
வழமை போலவே அன்றைக்கும் தன் செல்வமகளுக்குக் கதை சொல்லத் தொடங்குகிறார் ரோனன். கதை சொல்லும்போது அவரது மகள் சின்னச் சின்னக் கேள்விகள் கேட்பது வழக்கம். ரோனனும் ஆர்வமாய்ப் பதில் சொல்வார். அன்றைக்கும் அதேபோலச் சில கேள்விகள் கேட்கிறது அச்சிறு பெண்குழந்தை.
சிறுது நேரத்தில் தூங்கிவிடுகிறாள். ஆனால் ரோனனுக்கு அன்றைக்குத் தூக்கம் வரவில்லை. “இவள் எவ்வாறு நான் சொல்லும் கதைகளைப் புரிந்துகொள்கிறாள்?” என்னும் கேள்வி அவருள் திரும்பத் திரும்ப எழுகிறது. சின்னஞ்சிறு குழந்தையான அவளால், தான் சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அது சார்ந்து கேள்வி கேட்க முடிகிறது. தான் அதற்குச் சொல்லும் பதிலையும் கிரகிக்க முடிகிறது.
மிகச்சில சொற்களே அறிமுகமாகியிருக்கும், ஒரு சிறு குழந்தையால் மொழியைப் புரிந்துகொள்ள முடியும் எனில், இதையே ஏன் மொழியறியும் ஏ.ஐ.யில் பயன்படுத்தக் கூடாது என்று அவருள் ஒரு மின்னல் வெட்டுகிறது.
Add Comment