ஆஷ்டன் குச்சர், புகழ்பெற்ற ஹாலிவுட் நடிகர். 2015களில் பிரபலமாக இருந்த ‘டூ அண்ட் அ ஹாஃப் மென்’ (Two-and-half men) நகைச்சுவை தொடரில் நடித்துக் கொண்டிருந்தார். படப்பிடிப்புத் தளத்தில் அவரைப் பார்க்க வந்தார் ‘ஹாவி லியு’ (Howie Liu) என்கிற ஒரு மென்பொருள் நிறுவனத் தலைவர். வந்தவர் அவருடைய செயலியை விளக்கினார். அதைப் பார்த்து அசந்த ஆஷ்டன் குச்சர், ‘இது திரைப்படத் தொழிலுக்கு மட்டுமில்லை, பல துறைகளுக்கும் பெரும் உதவியாக இருக்கும்’ என்று சொல்லி அந்த இடத்திலேயே சில மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்தார். அந்தச் செயலிதான் இன்று பல ஆயிரம் கோடி ரூபாய் சந்தை மதிப்பு கொண்ட ஏர்டேபிள் (Airtable).
நம் எல்லோருக்கும் மைக்ரோசாப்ட் எக்ஸெல் விரிதாள்கள் தெரியும். அவற்றைக் கொண்டு நம் வேலைக்குத் தேவையான தரவுகளைப் பகுப்பாய்ந்து விடை சொல்லும் குறுஞ்செயலிகளை நாமே தயாரித்துக் கொள்வோம். அவற்றைத் தாண்டி, கூடுதல் அளவுத் தரவுகளை அல்லது பலரும் ஒரே சமயத்தில் பயன்படுத்தக் கூடிய நிரல்களை எழுத, தரவுத்தளங்கள் (Database) என்கிற மென்பொருட்களைப் பொறியாளர்கள் பயன்படுத்துவார்கள்.
இவை விரிதாள்களை விடச் சக்திவாய்ந்தவை, ஆனால் இவற்றைப் பயன்படுத்த நிரலாக்கம் தெரிந்திருக்க வேண்டும். அதில் தேர்ச்சி இல்லாத காரணத்தாலேயே இன்றும் பல பெருநிறுவனங்களில் பல அன்றாடப் பணிகள் விரிதாள்களைக் கொண்டு திரும்பத் திரும்பச் செய்யப்படுகின்றன.















Add Comment