‘திருப்பதி என்றால் லட்டு, பழனி என்றால் பஞ்சாமிர்தம், திருவையாறு என்றாலே அசோகா அல்வா… திருவையாறு ஆண்டவர் ஒரிஜினல் நெய் அல்வா கடை, எங்களுக்கு வேறு எங்கும் கிளைகள் இல்லை.’ என்று ஏற்ற இறக்கங்களுடன் பேசும் விளம்பரம் திருச்சி வானொலியில் அடிக்கடி வரும்.
அசோகா என்பது பாசிப்பருப்பை மூலமாக வைத்துச் செய்யப்படும் இனிப்பு. அல்வா என்றால் கோதுமை. இரண்டு மூலப்பொருட்களையும் அளவாகக் கலந்து பக்குவமாகச் சமைத்தால் கிடைப்பது அசோகா அல்வா.
அந்தக் காலத்திலெல்லாம் கோதுமை மாவைக் கரைத்து எளிதாகச் செய்யப்படும் இன்ஸ்டன்ட் அல்வா கிடையாது. அல்வா வேண்டுமென்றால் இரண்டு நாட்களுக்கு முன்பே திட்டமிட வேண்டும். கோதுமையை முதல் நாள் ஊறவைத்து அரைத்துப் பிழிந்து பாலெடுத்துக் கொண்டு, அது கெட்டிப்படும்வரை கை உடையக் கிளற வேண்டும். அப்போதுதான் கண்ணாடி போன்ற பளபளப்பில் அல்வா கிட்டும் .
Add Comment