ஹை, போன்!
“அக்கா, பார்த்தீர்களா? அமெரிக்காவில் முதல் பெண் சபாநாயகர் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்!” என்று நாளிதழைத் தன் சகோதரி கவிதாவிடம் ரவி காட்டினான்.
கவிதா புன்முறுவலுடன் “ஆமாம், நான்சி பலோசி… பெண்களுக்குப் பெருமைதான்! 200 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு பெண்மணி அந்த உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார்.”
இவர் திடீரென்று சபாநாயகராகத் தேர்ந்தெடுக்கப்படவில்லை. நான்சி 20 ஆண்டுகளாகப் பிரதிநிதிகள் சபைக்கு மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். செனட், பிரதிநிதிகள் சபை (காங்கிரஸ்) என்று இரண்டு அவைகளிலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட 25 பெண்களில் ஒருவர். ஜனநாயகக் கட்சியின் சிறுபான்மை அவைத் தலைவராக இருந்தார். இவர் ஈராக் மீது அமெரிக்கா போர் தொடுக்கக் கூடாதென வாக்களித்தவர்.















Add Comment