Home » அதிகார நந்தி – 30
அதிகார நந்தி நாள்தோறும்

அதிகார நந்தி – 30

மூன்று திட்டங்கள்

ஜோ பைடன் தனது ஆட்சியில் அமெரிக்காவின் உள்கட்டமைப்பை முற்றிலும் மாற்றியமைக்கும் மூன்று முக்கியத் திட்டங்களைக் கொண்டு வந்தார். இந்தத் திட்டங்கள் நாட்டின் பொருளாதார எதிர்காலத்தை மட்டும் மாற்றும் நோக்கம் கொண்டவை அல்ல. உலக அளவிலான தொழில்நுட்பம் மற்றும் தூய ஆற்றல் எரிசக்திக்கான போட்டியிலும் அமெரிக்காவின் நிலையை வலுப்படுத்துவதை இலக்காகக் கொண்டவை.

அமெரிக்காவின் உள்கட்டமைப்பு பல தலைமுறைகளாக அலட்சியப்படுத்தப்பட்டு வந்துள்ளது. பால்டிமோர் நகரில் பிரான்சிஸ் ஸ்காட் கீ பாலம் கப்பல் மோதியதால் சரிந்து விழுந்தது. இது வெறும் விபத்து மட்டுமல்ல, அமெரிக்காவின் உள்கட்டமைப்பு எவ்வளவு பழமையானது என்பதற்கான எச்சரிக்கை மணி. நாடு முழுவதும் 60,000க்கும் மேற்பட்ட பாலங்களுக்கு அவசரப் பழுதுபார்ப்பு தேவை. இவற்றில் பல, தினசரி பல லட்சம் வாகனங்கள் செல்லும் முக்கியப் பாலங்கள்.

அமெரிக்க சிவில் இன்ஜினியர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையின்படி, நாட்டின் உள்கட்டமைப்புக்கு D+ தரமே வழங்கப்பட்டுள்ளது. இதன் பொருள், அமெரிக்காவின் சாலைகள், பாலங்கள், விமான நிலையங்கள், நீர் விநியோக அமைப்புகள் அனைத்தும் கடுமையான பழுதுபார்ப்புத் தேவையில் உள்ளன. பல நகரங்களில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான நீர்க்குழாய்கள் பயன்படுத்தப்படுகின்றன. இவற்றிலுள்ள ஈயம் கலந்து குடிநீர் மாசுபடுவதால் மக்களின் ஆரோக்கியம் பாதிக்கப்படுகிறது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!