இன்றைய உலக அரசியலில், ஒரு நாடு மற்றொரு நாட்டின் நிலப்பரப்பைக் கட்டுப்படுத்த விரும்புவதில்லை. மாறாக, பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டுப்படுத்துவதையே நோக்கமாகக் கொண்டுள்ளது. அமெரிக்கா தனது ‘ஒற்றைத் துருவ’ அதிகாரத்தைத் தக்கவைக்க முயன்றுகொண்டிருக்கிறது. அதே வேளையில், சீனா மற்றும் ரஷ்யாவின் எழுச்சி உலகை மீண்டும் ஒரு அதிகாரப் போட்டிக்குள் தள்ளியுள்ளது.
இன்றைய உலக வரைபடம் வெறும் நாடுகளின் எல்லைகளால் மட்டும் வரையறுக்கப்படவில்லை; அதிகாரம், கச்சா எண்ணெய், வரி விதிப்பு போன்ற கண்ணுக்குத் தெரியாத போர்க்கருவிகளால் செதுக்கப்பட்டு வருகிறது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகம் கண்டிராத ஒரு மாபெரும் புவிசார் மாற்றத்தை நாம் இப்போது சந்தித்துக் கொண்டிருக்கிறோம்.
வழக்கம் போல அமெரிக்காவும் ரஷ்யாவும்தான் இந்த ஆட்டத்தின் கயிறுகளை இறுகப் பிடித்திருக்கிறார்கள் என்பதில் ஐயமில்லை. எதிரிகள் போலத் தெரிந்தாலும், நண்பேண்டா என்று டிரம்ப்பும் புதினும் கட்டிப்பிடித்த காட்சி அலாஸ்காவில் நடந்த பிறகும், பல தொலைக்காட்சி உரையாடல்களில் அந்த நட்பு தொடர்ந்துகொண்டேதான் இருக்கிறது.















Well explained article