தந்தை சொல்மிக்க மந்திரமில்லை
ஜாப்ஸின் உருவமே மாறிப் போயிருந்தது. அவருடைய அம்மா க்ளாராவால் அதை நம்ப முடியவில்லை. ஏழு மாதங்களில் இத்தனை உருமாறி வருவார் என க்ளாரா நினைத்திருக்கவில்லை. தன் மகன் மேல் க்ளாராவுக்கு அலாதிப் பிரியம்.
க்ளாராவுக்கும் பால் ஜாப்ஸுக்கும் திருமணமாகி ஒன்பது ஆண்டுகள் குழந்தையில்லை. ஒருமுறை க்ளாரா கருவுற்றார். தங்கவில்லை. அவர்களின் வாழ்வில் மற்ற எல்லாமும் இருந்தது. குழந்தை மட்டும் இல்லை. இனி க்ளாராவுக்குப் குழந்தை பிறப்பது அரிது என மருத்துவர்கள் கூறிவிட்டனர். எனவே தத்தெடுப்பது என முடிவு செய்து அழகிய ஆண் குழந்தை ஒன்றைத் தத்தெடுத்து ஸ்டீவன் பால் ஜாப்ஸ் எனப் பெயரிட்டனர்.
ஜாப்ஸைப் பெற்றெடுத்தவர் ஜோன் ஸ்கிபிள். ஜோனின் தந்தை கத்தோலிக்க மரபுகளில் தீவிரப் பற்றுடன் இருந்தவர். கண்டிப்பானவர்.
விஸ்கான்சின் பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த ஜோன், அங்கே ஜான் என்பவரைக் காதலிக்கத் தொடங்கினார். அவரது முழுப்பெயர் அப்துல்ஃபத்தா ஜான் ஜன்டாலி. சிரியாவிலிருந்து வந்திருந்தார். வசதியான குடும்பம்.















Add Comment