தோல் நிறமும் தன்னம்பிக்கையும்
ஒவ்வொரு முறை பெண் பார்க்க வரும்போதும் லதாவுக்குச் செத்துப் பிழைத்த மாதிரிதான். வந்தவர்கள், பிற தகவல்களிலெல்லாம் திருப்தி அடைந்தவர்களாகக் காணப்படுபவர்கள், அவளைப் பார்த்தவுடன் திடீரென்று மாற்றம் அடைவார்கள். அவளும் புடைவையை எப்படியெல்லாமோ தந்திரமாகக் கட்டிப் பார்த்துவிட்டாள். மெல்லிய கோடுகள், நீளக்கோடுகள், அகலவாட்டில் கோடுகள், பெரிய கரை, சின்னக் கரை, லேசான கலர், கருத்த வண்ணம்.
இப்போது இதெல்லாம் ஒரு பொருட்டாகத் தோன்றவில்லை- பெண் கொஞ்சம் இரட்டை நாடி என்கிற பெயர் நிலைத்துப் போய்விட்டது. அவளுக்கு மிக நெருங்கினவர்களே அவளைப் பற்றி அடையாளம் கூற வேண்டியிருக்கும்போது வெகு இயல்பாகக் கொஞ்சம் குண்டாக இருப்பாங்களே, அந்த அம்மாதான் என்று சொல்கிறார்கள் என்பதை அவளால் ஊகித்துக் கொள்ள முடிந்தது.
எது எப்படியோ குண்டுப் பெண்ணாக இருந்தாலும் இன்னும் பெண் பார்க்க வருகிறார்கள். அவர்கள் என்னைப் பிடிக்கவில்லை என்று சொல்வதற்குப் பதிலாக நான் அந்த ஆண்களைப் பிடிக்கவில்லை என்று சொன்னால் என்ன? வருபவன் எவ்வளவு கருப்பாகவும் குட்டையாகவும் வழுக்கைத் தலையாகவும் ஒண்ணரைக் கண்ணனாகவும் இருந்தால்கூட நான் ஏன் அவனைப் பிடிக்கவில்லை, வேண்டாம் என்று சொன்னது கிடையாது?















Add Comment