Home » அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 9
அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் தொடர்கள்

அழகென்ற சொல்லுக்கு ஆப்பிள் – 9

09. மர்க்குலா

வாஸின் சர்க்யூட் டிசைன் தயார். ஜாப்ஸ் தனது கோணத்தில் ஒவ்வொரு பாகத்தையும் செம்மைப்படுத்தும் பணியில் ஈடுபட்டிருந்தார்.

சிலவற்றை மாற்றியமைக்கலாம் என்று எண்ணினார் ஜாப்ஸ். வாஸை அழைத்தார். இன்னும் ஒரு விவாதம் தொடங்கியது. ஆப்பிளை மேம்படுத்துவதே நோக்கம். நீயா, நானா என்று வாதிடுவது அல்ல.

சர்க்யூட்டில் இந்தக் கோடுகள் ஏன் நேராக இல்லை? வாஸிடம் கேட்டார் ஜாப்ஸ். நேராகத்தான் இருக்க வேண்டும் என்றில்லை. வேலை செய்தால் போதும். இந்த டிசைனால் சர்க்யூட்டின் அளவிலோ, திறனிலோ எவ்விதக் குறைபாடும் இல்லை. இது வாஸின் வாதம்.

கம்ப்யூட்டரின் உள்ளிருக்கும் சர்க்யூட்டை யாரும் அவ்வளவு உன்னிப்பாகப் பார்க்கப்போவதில்லை. அப்படியே விட்டுவிடலாம் என்றார் வாஸ்.

இளம் வயதில் தன் தந்தையிடம் ஜாப்ஸ் ஒரு பாடம் கற்றிருந்தார். அவர் செய்யும் பொருள்களில் கண்ணுக்குத் தெரியாத பாகங்களும் அழகாக இருக்கவேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இது ஜாப்ஸின் மனத்தில் ஆழமாகப் பதிந்திருந்தது.

முழுதும் வாசிக்க இங்கே பதிவு செய்து, உங்கள் சந்தாவைத் தேர்ந்தெடுங்கள்



Add Comment

Click here to post a comment

இந்த இதழில்

error: Content is protected !!