சிற்பி
செவ்வகத்துக்கு ஒரு சிக்கல். ஜாப்ஸுக்கு அவற்றைப் பிடிக்கவில்லை. செவ்வகம் நல்ல வடிவம்தான். ஆனால் ஜாப்ஸின் பார்வையில் அவை செயற்கையானவை.
முதல் முறையாக வாசிக்கும்போது ‘இதென்ன குழப்பம்’ என்றுதான் தோன்றும். முன்கதைச் சுருக்கத்தைத் தெரிந்துகொண்டால் ‘அட… ஆமாம்’ என்று வியக்கவைக்கும்.
ஜாப்ஸின் அறை. கதவை வேகமாகத் திறந்து உள்ளே வருகிறார் ஒருவர். அவர் அறைக்குள் வேறு யார் இவ்வாறு வர முடியும்? அட்கின்ஸன்தான்.
‘இனி நம்மால் வட்டத்தை எளிதாக வரைய முடியும்.’ அட்கின்ஸனின் உற்சாகம் அவரது குரலில் எதிரொலித்தது. வட்டம் வரைவதில் என்ன பிரச்சினை? எந்தவொரு ஜ்யோமெட்ரிக் வடிவமும் ஓர் ஒழுங்குக்கு உட்பட்டது. வட்டமும் இதற்கு விதிவிலக்கல்ல.
வட்டம் வரைவதற்குச் சிக்கலான கணிதச் சமன்பாடுகள் உள்ளன. அவற்றில் ‘ஸ்கொயர் ரூட்’ என்னும் செயல்பாடும் உண்டு. ஸ்கொயர் ரூட் என்றால் வர்க்க மூலம்.
அப்படியென்றால்?
இருபத்தைந்து என்னும் எண்ணை எடுத்துக்கொள்ளுங்கள். இதன் வர்க்கமூலம் ஐந்து. பதினாறு என்றால் நான்கு. முப்பத்தாறு என்றால் ஆறு. 25 = 5 x 5. 16 = 4 x 4. 36 = 6 x 6.















Add Comment