அழகு
ரீட் கல்லூரியில் சில காலம் ஜாப்ஸ் படித்தார். கல்லூரி சொன்ன பாடத்திட்டம் அல்ல. அவராகவே தேர்ந்தெடுத்த பாடங்கள். எந்த வகுப்பு பிடிக்கிறதோ அதில் சென்று அமர்ந்துகொள்வது. அப்படி ஜாப்ஸ் படித்த ஒரு பாடம்தான் காலிகிராஃபி. எழுத்துகளைச் சித்திரம்போல அழகாக எழுதும் கலை.
எப்போதோ ஜாப்ஸ் படித்திருந்த காலிகிராஃபி, ஆப்பிள் டிசைனர்களைச் சோதித்தது. ஃபாண்ட் மீட்டிங் என்றாலே அலறினர். தொடக்கத்தில் அவர் என்ன சொல்கிறார் என்றே பலருக்கும் புரியவில்லை.
சூஸன் கேர் என்றொரு டிசைனர். ஃபாண்ட் வடிவமைப்பதில் ஆர்வம் காட்டினார். ஜாப்ஸ் அவரைப் பிடித்துக்கொண்டார். விதவிதமாக ஃபாண்ட்கள் செய்தனர். பெரும்பாலானவற்றை ஜாப்ஸ் ரிஜெக்ட் செய்துவிடுவார். சூஸனும் விடுவதாக இல்லை.
ஒரு ஃபாண்ட் கலெக்ஷனை உருவாக்கினார். அவற்றுக்கு ஃபிலடெல்ஃபியாவில் இருந்த ரயில் நிலையங்களின் பெயர்களைச் சூட்டியிருந்தார் சூஸன். ஓவர்ப்ரூக், ரோஸ்மெண்ட் இப்படி உலகம் அறிந்திராத பெயர்கள்.















Add Comment